कोशिश गोल्ड - मुक्त
ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
DINACHEITHI - KOVAI
|May 25, 2025
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
-
இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நடப்பாண்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நேற்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த கோடை விழாவின் தொடக்க விழா நேற்று மாலை 4 மணியளவில் ஏற்காடு கலையரங்கில் நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அவர்கள் வேளாண்மை துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பட்டுவளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
यह कहानी DINACHEITHI - KOVAI के May 25, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - KOVAI से और कहानियाँ
DINACHEITHI - KOVAI
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 mins
December 03, 2025
DINACHEITHI - KOVAI
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு
புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.
1 mins
December 03, 2025
DINACHEITHI - KOVAI
டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
December 03, 2025
DINACHEITHI - KOVAI
நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு
1 min
December 02, 2025
DINACHEITHI - KOVAI
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்
சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1 mins
November 29, 2025
DINACHEITHI - KOVAI
சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
1 min
November 29, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது
2 mins
November 29, 2025
DINACHEITHI - KOVAI
மதுரை, கோவைக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை: புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 28, 2025
Translate
Change font size
