कोशिश गोल्ड - मुक्त
ட்ரம்ப் அதிரடி! பாதகமா? சாதகமா?
Nakkheeran
|January 25-28,2025
‘புலி வருது... புலி வருது' கதையாக... உண்மையிலேயே புலி வந்து விட்டது. ஆம்! அதிரடிக்குப் பெயர்போன டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவரி 20, திங்கள்கிழமை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, தனது அதிரடிகளை முதல் நாளிலேயே தொடங்கிவிட்டார்.
'கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை! அமெரிக்காவின் இறையாண்மையை காப்பாற்றி, வலுவான அமெரிக்காவை கட்டமைப்போம்!' என்ற கோஷத்தின் அடிப்படையில் தான் ட்ரம்ப் இரண்டாவது முறையாகத் தனது 78வது வயதில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆபீஸராக செயல்பட்டதால், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
குறிப்பாக, அமெரிக்காவுக்குள் அண்டை நாடுகளின் வழியாக சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுப்பதற்கு பிரமாண்ட பாதுகாப்பு அரண்களை அமைத்தார். அந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி, பேசுபொருளானது. அமெரிக்கவாழ் வெளிநாட்டினர்களின் வேலைவாய்ப்பு விஷயத்தில் சட்டத்தை கடுமையாக்கப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது பதவியேற்ற முதல் நாளிலேயே அது தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்! தங்கள் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டுப் பிரச்சனைகள், போர்கள் காரணமாக அகதிகளாக அமெரிக்காவுக்குள் மெக்ஸிகோ வழியாக, அமெரிக்காவுக்குள் தஞ்சமடையக் கோருபவர்கள், தங்கள் மீதான வழக்குகள் முடியும் வரை மெக்ஸிகோவில் காத்திருக்க வேண்டுமென்று அறிவித்துள்ளார். ட்ரம்பின் முந்தைய ஆட்சிக்காலத்திலும் இதுபோலவே தான் அவர் அறிவித்திருந்தார்.
அடுத்ததாக பைடனின் ஆட்சிக்காலத்தில், மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் தஞ்சமடைய நினைப்பவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் பொய்யான தகவலைக் கொடுத்து நுழைந்திருப்பது தெரியவந்தால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் அதற்குள் ஓரிரு ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்திருப்பார்கள். அப்படி வசிப்பவர்களில், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக இருக்கும்பட்சத்தில், அது அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஆபத்தாகக்கூடும். எனவே அவர்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல், மெக்ஸிகோவில் காத்திருக்கவைத்து, முழுமையான விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் தென்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
यह कहानी Nakkheeran के January 25-28,2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Nakkheeran से और कहानियाँ
Nakkheeran
கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!
\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"
3 mins
May 02-05, 2026
Nakkheeran
திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பெரும் பலம்!
ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.
1 mins
May 02-05, 2026
Nakkheeran
விவசாயிகளுக்கு வஞ்சனை!
விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.
3 mins
May 02-05, 2026
Nakkheeran
இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!
தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
வார் ரூம்
(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!
3 mins
May 02-05, 2026
Nakkheeran
சீட் தேறுமா? விஜய் யாகம்!
2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!
தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?
ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?
முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.
3 mins
May 02-05, 2026
Translate
Change font size
