कोशिश गोल्ड - मुक्त
தொக்கம்
Andhimazhai
|June 2024
ஆச்சி இப்படி மூக்கைய்யா வீட்டுத் திண்ணை வரைக்கும் இழுத்துக் கொண்டு வரும் என்று தங்கப்பாண்டி கொஞ்சம்கூட நினைக்கவில்லை. ஆனால் ஆச்சிக்கு பாசம் எவ்வளவு அதிகமோ அதைவிட பிடிவாதம் ரொம்ப அதிகம்.
ஆச்சியின் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த தண்டட்டி வெய்யிலின் விரல்கள் பட்டு மின்னலை விசிறிக்கொண்டிருந்தது.. தங்கப்பாண்டி பக்கம் திரும்பி “கொஞ்சம் பொறுத்துக்க ராசா கூட்டம் கொறைஞ்சிகிட்டே இருக்கு.. பாத்துடலாம்” என்று தன் கரடு பாய்ந்த கரங்களால் அவனை வருடினாள். முள்வேலியில் ஒரு துணுக்கு எடுத்து உடலில் வருடுவது போல இருந்தது. ஆனால் அது தங்கப்பாண்டிக்கு எப்பொழுதும் சுகமான வருடல். அரித்த இடத்தில் சொரிவது போல.. ஆச்சியின் பாசம் கொஞ்சம் வன்மையானது. ஆனால் தப்பவே விரும்பாத அன்பின் வலை ஆச்சியுடையது. இந்த வயதிலும் தங்கபாண்டிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வக்கணையாக செய்து தருவாள். அப்பாவின் கோபம் அதி பயங்கரமானது. அவர் தாண்டவமாடும்போதெல்லாம் ஆச்சிதான் அவரோடு மல்லுக்கட்டுவாள். தாயில்லா பிள்ளை என்று எல்லாவற்றிலும் ஆச்சியின் செல்லம் அதிகம். ”எனக்கு ஒண்ணுமில்லே ஆச்சி சொன்னா கேக்க.....” முடிப்பதற்குள் வயிற்றிலிருந்து ஏதோஒன்று உருண்டு வாய் வரை வந்தது போல ஒமட்டியது. ஒவ்வே என்று அவனையறியாமல் குரல் கொடுத்தான். ”பாத்தியா ஒண்ணுமில்லை .ஒண்ணுமில்லைன்றே இப்படி ஒமட்டறே” பதறிப்போய் எழுந்து அவன் தலையைப் பிடித்துக்கொண்டாள். தங்கப்பாண்டிக்கு தலை சுற்றியது. இரண்டு நாட்களாக சரியான ஆகாரமில்லாமல் கிறக்கமாக இருந்தது..
”வுடு ஆச்சி எனக்கு ஒண்ணுமில்லை.. நீயும்தான் காலையிலேர்ந்து எதுவும் சாப்புடலை ரெண்டு நாளா பசியே இல்லைன்றே அப்ப ஒன் வயித்துலேயும் யாரோ மருந்து வச்சிட்டாங்களா..? ஒனக்கும் தொக்கம் பாத்துரலாமா?” ”இப்படி ஏகடியம் பேசக்கூடாது.. நா கெழ மட்டை நீ எளங்குருத்து ரெண்டும் ஒண்ணு ஆவுமா?..செத்த பேசாம இரு கண்ணு... மூக்கையன் கில்லாடி எப்பேர்ப்பட்ட கல்லு,மருந்து, மாயம்னாலும் ஊதி எடுத்துடுவான். இருவது வருசமா சுத்துப் பட்டி கிராமத்துல் இருக்கற சனம் பூரா அவனாலதான் நடமாடிக்கிட்டு இருக்கு.. கெட்டிக்காரன்”
”ஏன் ஆச்சி வசியம் பண்ணுன மருந்தையும் எடுத்துருவாரா” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த நடுத்தர வயது அம்மணி கேட்டாள்.
यह कहानी Andhimazhai के June 2024 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Andhimazhai से और कहानियाँ
Andhimazhai
குடும்பத்தின் கதை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.
1 min
March 26
Andhimazhai
குடும்ப அரசியலும் மத அரசியலும்
இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.
4 mins
March 26
Andhimazhai
அங்கே குற்றம்...இங்கே சகஜம்!
உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:
6 mins
March 26
Andhimazhai
கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்
‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.
4 mins
March 26
Andhimazhai
அவர் பாடும் பாடல்!
எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.
4 mins
March 26
Andhimazhai
நிலவின் கதைகள்
\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.
1 min
March 26
Andhimazhai
பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்
இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.
4 mins
March 26
Andhimazhai
குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...
அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.
2 mins
March 26
Andhimazhai
ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!
பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.
1 mins
March 26
Andhimazhai
வெற்று சாகசம்: முதல்வன்
ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.
2 mins
March 26
Translate
Change font size
