Essayer OR - Gratuit
இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!
Kanmani
|August 20, 2025
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.
வருடத்திற்கு ஓரிரு படங்கள் மட்டுமே நடிப்பேன் என கொள்கையுடன் இருப்பவர் சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
சினிமாவில் உங்க வெற்றியை எப்படி பார்க்குறீங்க?
என்னுடைய 20 வருடகால சினிமா வாழ்க்கையில், இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருக்கும் பலவிதமான பெண்களின் வாழ்வியலை என் நடிப்பின் மூலமா திரையில் வெளிக்காட்டி இருக்கேன். நான் காலேஜ்'ல படிக்கும் போது லோக்கல் ட்ரெயினில் முதல் வகுப்பு பெட்டியில் போவேன். அப்போ ட்ரெயினில் உட்கார்ந்துக்கிட்டே இரவு உணவுக்கு தேவையான காய்கறிகளை வெட்டிக் கிட்டு, நிறைய கதைகளை குடும்ப பெண்கள் பேசிட்டு இருப்பாங்க. முதல் வகுப்பு பாஸ் எக்ஸ்பயரி ஆனதும், ரெண்டாம் வகுப்பும் பயணம் செய்தேன். அங்க இருந்த எனர்ஜி முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. ரொம்ப சத்தமா பெண்கள் அங்கேயும் பேசிட்டு இருந்தாங்க. இப்படி ஒவ்வொரு பெட்டியிலும் சொல்ல பெண்களோட கதைகள் நிறைய இருக்கு. இந்திய சினிமாவில் அப்படியான பெண்ணியம் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் கிடைச்சு வருவதில் சந்தோஷம். அந்த மாற்றத்தில் நானும் பயனடைஞ்சிருக்கேன். எனக்கு கிடைக்கும் பேர், புகழுக்கு நான் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது.
உங்களை தனித்துவமான நடிகையாக பார்க்குறாங்களே?
அது சந்தோஷம்தான். ஆனா, அதுக்காக நான் எதையும் பிளான் பண்ணி செய்யல. திட்டம் எதுவும் வகுக்கல. பொதுவாக ஒரு வேலை சரியா நடக்கணும்னா சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டியது அவசியம். என்னுடைய கெரியரில் என்னை நோக்கி வந்த எல்லா வாய்ப்புகளையும் நான் சரியா பயன்படுத்திக்கிட்டேன். வேலை செய்யணும்ங்கிற பசி எனக்குள்ள இருந்துட்டே இருக்கும். என்னோட கனவு வாழ்க்கையைத்தான் இப்போ நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.

Cette histoire est tirée de l'édition August 20, 2025 de Kanmani.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kanmani
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
