Facebook Pixel இருமனம் இணைந்திடும்... | Kanmani - womens-interest - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

இருமனம் இணைந்திடும்...

Kanmani

|

August 20, 2025

அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.

- -சொ.கலைவாணி சொக்கலிங்கம்

இருமனம் இணைந்திடும்...

முந்தைய நாள் இரவில் நடந்த மாப்பிள்ளை அழைப்பு வரை அமைதியாய் நல்லபிள்ளையாய் பெற்றோர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நின்ற மாப்பிள்ளை முகூர்த்த நேரம் நெருங்கும் சமயத்தில் உடை மாற்றும் இடைவெளியில் காணாமல் போயிருந்தான். எப்படி... எவர் உதவியோடு மண்டபத்தைவிட்டு வெளியேறினான் என்று மணமகனின் தந்தை உடனிருந்தவர்களைக் குடைந்து கொண்டிருக்க, கூடியிருந்த கூட்டம் ஆளாளுக்கு ஒன்றை திரித்துப் பேசத்துவங்கினர்.

வாத்தியக்காரர்கள் மூட்டை முடிச்சைக் கட்டலாமா? ஊதியத்தை எப்படிக் கேட்பது... என்ற குழப்பத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க, பெண் வீட்டு உறவினர்கள் மணமகனின் பெற்றோருடன் மல்லுக்கு நின்றனர்.

"என்னய்யா புள்ள வளர்த்து வெச்சிருக்க? நேத்து வரைக்கும் மூச்சுக்காட்டாம நின்னவன் இப்ப திடீர்னு ஓடிப்போனால் என்ன அர்த்தம்? எவளையாவது லவ் பண்றானா? மிரட்டி கல்யாண ஏற்பாடு பண்ணீங்களா?"

"நான் நேத்தே கவனிச்சேம்ப்பா! பய ஒரு மாதிரி பீதியில தான் இருந்தான். மாப்பிள்ளைக்கு உண்டான களையே இல்லையே... போட்டோவுக்கு கூட திருதிருன்னு தானே முழிச்சிட்டு இருந்தான்? அப்பவே நினைச்சேன் ஏதோ வில்லங்கம் இருக்கும்னு... நான் நினைச்சது சரியாப்போச்சு."

"யோவ்! முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ள அவன் இங்கே வந்தாகணும். இல்ல மொத்தக் குடும்பத்தையும் ஜெயிலுக்கு அனுப்பிடுவோம்."

"ஹலோ! என்ன ஓவராப் பேசுறீங்க? அவன் போனதுக்கு நாங்க என்ன பண்ணுவோம்? எங்களுக்கு மட்டும் அவமானம் இல்லையா? நஷ்டம் இல்லையா? விட்டால் உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க?"

மணமகனின் தமையனும் பதிலுக்கு எகிற, அங்கே கைகலப்பு ஆரம்பமானது. இன்னும் சற்று நேரத்தில் மகளின் கழுத்தில் தாலியேறிவிடும் என்ற பதட்டத்தில் ஆனந்தத்தில் இருந்த மகேஸ்வரி உடல் தள்ளாட சுவரோடு சரிந்த நேரம் சற்று உரக்கவே குரல் கொடுத்தார். பத்மநாபன். மகேஸ்வரியின் ஒன்று விட்ட தமையன். “

அட நிறுத்துங்கய்யா! அவன் தான் எல்லார் மூஞ்சியிலயும் கரியப் பூசிட்டு போயிட்டானே! இனி அவனைப்பத்தி பேசி என்னாகப் போகுது? இனி நடக்கப் போறதைப் பத்தி யோசிப்போம்.”

"இனி எதை யோசிக்கிறது மாமா? ஆபீஸ்ல லோன் போட்டு... அக்கம் பக்கம் கடன் வாங்கி எல்லா ஏற்பாட்டையும் பண்ணியிருக்கேன். பத்துலட்சம் நஷ்ட ஈடு தராம இவனுங்களை வெளியே விடமாட்டேன்” என்றான் முகுந்தன்.

PLUS D'HISTOIRES DE Kanmani

Kanmani

Kanmani

கனவெல்லாம் நினைவானால்...

கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...

time to read

10 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?

வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?

பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.

time to read

3 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?

அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.

time to read

4 mins

May 06, 2026

Kanmani

Kanmani

அருகிலேயே இருக்கிறது வழி!

சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.

time to read

4 mins

May 13, 2026

Kanmani

Kanmani

கர

எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!

அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size