Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année
The Perfect Holiday Gift Gift Now

‘புதிய மொந்தையில் பழைய கள்’

Virakesari Weekly

|

June 22, 2025

மலையக மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் இழுபறி நிலைமைகள் இருந்து வருகின்றன.

‘புதிய மொந்தையில் பழைய கள்’

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் இம்மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து பிரச்சினைகளுக்கான தீர்வினை ஓரளவு பெற்றுக் கொடுத்து வருகின்றபோதும் இவ்வரசியல்வாதிகளின் செயற்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருவதும் தெரிந்ததாகும்.

இதனிடையே மலையக மக்களின் பிரதிநிதித்துவ அரசியல் கலாசாரம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வரும் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதிநிதித்துவ அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபட்டு நேரடியாக அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு அபிவிருத்தியை பெற்றுக் கொள்ள முற்படுதல் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கான வாய்ப்பு கடந்தகால தேர்தல்களின் ஊடாக கிடைத்துள்ள நிலையில் மலையக மக்கள் இதனைப் பயன்படுத்தி அரசாங்கத்திடம் உச்சகட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள முனைதல் வேண்டும். இதேவேளை அரசாங்கமும் தனது பொறுப்பிலிருந்தும் விலகிச்செல்ல முற்படுதல் கூடாது.

சமூக அபிவிருத்தியில் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் இன்றியமையாததாகும். அரசியல்வாதிகளின் அர்த்தபுஷ்டியான செயற்பாடுகள், அர்ப்பணிப்பு போன்ற பலவும் சமூக அல்லது நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுப்பதாக அமையும். இந்த வகையில் அரசியல் பிரதிநிதித்துவமானது அர்த்தமுள்ள வகையில் அமைதல் வேண்டும். இதைவிடுத்து வெறுமனே நாற்காலியை சூடேற்றும் பிரதிநிதித்துவங்களால் ஒரு போதும் சமூக அபிவிருத்தி ஏற்படப் போவதில்லை. அர்த்தமுள்ள அரசியல் பிரதிநிதித்துவங்கள் பின்னிலையில் இருந்த பல சமூகங்கள் முன்னிலைக்கு வருவதற்கு உந்துசக்தியாகி இருக்கின்றன. உலகளாவிய ரீதியில் இது நடந்தேறி இருக்கின்றது. இதன் எச்சங்களை இப்போதும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில் அரசியலும் சமூகமும் என்ற ரீதியில் நாம் நோக்குகின்றபோது மலையக மக்கள் நீண்ட காலமாகவே அரசியலில் ஆதிக்கமில்லாத, புறந்தள்ளப்பட்ட ஒரு சமூகமாகவே இருந்து வந்துள்ளனர் என்பதனை யாவரும் அறிவர். இலங்கை 1948 இல் சுதந்திரமடைந்ததன் பின்னர் நாட்டில் பாலாறும் தேனாறும் பாய்ந்தோடப் போகின்றது. நாட்டு மக்கள் அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு புதிய பாதையில் பயணிக்கப் போகின்றனர் என்றெல்லாம் எண்ணங்கள் சிறகடித்துப் பறந்தன. எனினும் இது ஈடேறாத நிலையில் சுதந்திரக் கனவு பாழடிக்கப்பட்டதே நிதர்சனமாக இருந்தது. இதனையே பேராசிரியர் கா. சிவத்தம்பி பின்வருமாறு கூறுகின்றார்.

PLUS D'HISTOIRES DE Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back