Essayer OR - Gratuit
மனிதகுல முன்னேற்றத்துக்கு வழிகோலும் விண்வெளிப் பயணங்கள்
Virakesari Daily
|September 01, 2025
கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான்.
-
பின் இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பயணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது, மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்கள். அனுபவத்தைப் பெறுவதும், மற்றவர்கள் செய்வதை, சொல்வதைப் பற்றி சிந்திக்கும் சக்தி பெற்றிருப்பதும் மனித இனம். எனவே, மனித இனம் வாழ்வில் வளர்ச்சியடைந்து வருகிறது என்றார் தந்தை பெரியார்.
“மாறுதல் என்ற வார்த்தையைத் தவிர மற்ற எல்லாம் மாறும்" என்றார் கார்ல் மார்க்ஸ். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்படும் பலவித மாற்றங்களை எம்மைப் போன்றோர், நினைத்து நினைத்து மகிழும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் உலகில் நடக்கின்றன.
கட்டை வண்டியை மட்டுமே பயணத்துக்கு நம்பிய மனிதன் இன்றைக்கு விமானத்தில் பறக்கிறான். காலையில் ஒரு நாடு, மாலையில் ஒரு நாடு என்பதெல்லாம் இன்று மிக இயல்பாக நடக்கும் பயணங்கள். ஆகாய விமானத்தால் எமக்கு கிடைத்த பயன் இது. ஒரு மனிதன் முதன் முதலில் விமானத்தில் செல்லும் பயண அனுபவம் தனித்தன்மையானது. நிறைய விமானப் பயணங்கள் செல்பவர்கள் கூடத் தங்கள் முதல் விமானப் பயண அனுபவத்தை, ஒருவித மகிழ்ச்சியோடு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதைப் பார்க்க முடியும். ஒரு நாட்டில் பிறந்த மனிதன், இன்னொரு நாட்டுக்குச் செல்வதும், அங்கேயே சில ஆண்டுகளில் குடியுரிமை பெற்று வாழ்வதுமாக மானுட வாழ்க்கை என்பது பயண வளர்ச்சியால் மகத்துவம் பெற்றிருக்கிறது.
மனிதர்களின் அடுத்த கட்டப் பயணப் பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது. விமானத்தில் பறந்து அடுத்த நாடுகளுக்குச் செல்வதுபோல, மனிதன் ரொக்கெட்டில் விண்வெளிப் பயணம் செல்வதற்கான முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை ரொக்கெட்டில் மனிதர்கள் செல்லவில்லையா என்றால், சென்றார்கள். சரி இப்போது என்ன வேறுபாடு என்று கேட்டால், இதுவரை சென்றவர்கள் எல்லாம் விண்வெளியில் ஆராய்ச்சி செய்ய அறிவியல் அறிஞர்களால், நாடுகளால் அனுப்பப்பட்டவர்கள். 2021இல் சென்றவர்கள், ரொக்கெட்டில் உல்லாசப் பயணம் போல, சுற்றிப் பார்க்கப் போனவர்கள். ரொக்கெட்டில் சென்றார்கள், பார்த்தார்கள், திரும்பினார்கள், எவ்வளவு நேரப் பயணம், 10 நிமிடங்கள், 10 நொடிகள். இந்த 10 நிமிடங்கள், பத்து நொடிப் பயணம் என்பது ஜூலை 20, 2021ஆம் நாளை வரலாற்றில் மகத்தான நாளாக மாற்றியிருக்கிறது.
Cette histoire est tirée de l'édition September 01, 2025 de Virakesari Daily.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
