Essayer OR - Gratuit
மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வருடம் நடைபெறுமா?
Tamil Mirror
|July 09, 2025
ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவை நடந்துள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தல்களையும் தடத்த வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக மேலோங்கி வருகிறது.
தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, தென் பகுதியில் சில அரசியல்வாதிகளும் இந்தக் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். எனினும் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளினதும் தென் பகுதி அரசியல்வாதிகளினதும் கோரிக்கை ஒன்றெனக் கூற முடியாது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கும் போது அவற்றின் அடிப்படை நோக்கம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அரசில் அதிகாரத்தைப் பரவலாக்குவதாகவே இருந்தது.
எனினும், தமிழ் பகுதிகளுக்கு அதிகாரம் பரவலாக்கப்படும்போது, அதற்கு எதிராகத் தென் பகுதி மக்களிடமிருந்து எழக்கூடிய எதிர்ப்பை சமாளிப்பதற்காகவே நாட்டில் ஏனைய பகுதிகளிலும் மாகாண சபைகளை உருவாக்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார்.
எனவே, இப்போது மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை விடுக்கும் அரசியல்வாதிகனின் நோக்கங்களிலும் வேறுபாடுகளை எதிர்ப்பார்க்கத் தான் வேண்டும். தென் பகுதி அரசியல்வாதிகளுக்கு மாகாண சபையானது பணம் சம்பாதிப்பதற்கான அதிகாரத்தைப் பெறும் ஒரு வழி மட்டுமேயாகும்.
கடந்த காலத்தில் பாராளுமன்ற அளவில் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் இடமாகவே மாகாண சபைகள் கருதப்பட்டன.
தற்போதைய நிலையில், அவர்கள் மாகாண சபைத் தேர்தல்களை தம்மை பலப்படுத்திக் கொள்ளும் ஓர் உத்தியாகவே கருதுகின்றனர்.
வடக்கு, கிழக்கில் அரசியல்வாதிகன் எவரிடத்திலும் இவ்வாறான நோக்கங்கள் இல்லை என்று கூற முடியாது. ஆயினும், மாகாண சபைகள் விடயத்தில் அவர்களில் பலரிடம் ஓர் அரசியல் நோக்கமும் இருக்கிறது. அதாவது, போதுமானதாக இல்லாவிட்டாலும் மாகாண சபைகளானது ஓரளவுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஓர் அரசியல் பொறிமுறையாகும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றதோர் கருத்தும் பலரிடம் இருக்கிறது.
இளப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது 1980களில் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. குறிப்பாக 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் பின் இந்தியா தமது உயர்மட்ட அதிகாரிகளான கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் ரொமேஷ் பண்டாரி போன்றவர்கள் மூலம் இந்த விடயத்தை ஏற்குமாறு இலங்கை அரசாங்கத்திள் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தது.
Cette histoire est tirée de l'édition July 09, 2025 de Tamil Mirror.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

