Essayer OR - Gratuit
பதிப்புலகின் முன்னோடி...
Dinamani Virudhunagar
|November 23, 2025
தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
பெண் வாசகர்களால் கொண்டாடப்படும் ரமணி சந்திரனை அறிமுகப்படுத்தியது அருணோதயம். அவரது நூல்கள் இன்றும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
அருணனைப் போன்ற பழம்பெரும் பதிப்பாளர்கள்தான் பதிப்பு உலகுக்குப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்கள். சென்னைப் புத்தகக் காட்சிக்கு ஆரம்பகாலத்தில் அடித்தளமிட்டு வளர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
நூற்றாண்டு கண்ட இவர் சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட தேவகோட்டையில் 1924-இல் லட்சுமணன் செட்டியார்- சீதை ஆச்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
மலேசியாவில் லட்சுமணன் வணிகம் புரிந்து வந்த நிலையில், தொழிலில் ஏற்பட்ட பின்னடைவால் சிரமமான நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆதலால் அருணனின் இளமைக்காலம் சிரமமாகவே இருந்தது. தேவகோட்டை பள்ளியில் இவர் பதினோராம் வகுப்பு படிக்கும்போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
நள்ளிரவில் தேசத் தலைவர்களைக் கைது செய்த ஆங்கிலேய ஆட்சியைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் முதன்முதலாக அருணோதயம் அருணன் மேடையேறி, “மகாத்மா காந்தியை நள்ளிரவில் கோழைகள் போல் கைது செய்த ஆங்கிலேயர்களைப் பாதாளத்தில் போட்டு புதைக்கும் வரை ஓய மாட்டோம்” என்று உரத்தக் குரலில் முழக்கமிட்டார். இதனாலேயே அவர் போலீஸாரின் கவனத்துக்குரியவராக மாறிவிட்டார்.
ஆங்கிலேய எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற இருந்தபோது, அதற்கு சில நாள்களுக்கு முன்னதாகவே சின்ன அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையைச் சூழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறைக்கதவுகளை உடைத்தெறிந்து, தலைவர்களை விடுதலை செய்தனர். இதற்காக போலீஸாரால் தேடப்பட்டவர்களில் அருணனும் ஒருவர்.
Cette histoire est tirée de l'édition November 23, 2025 de Dinamani Virudhunagar.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
1 mins
December 03, 2025
Dinamani Virudhunagar
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Virudhunagar
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Virudhunagar
மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்
'மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரத மரான ஜவாஹர்லால் நேரு விரும் பினார்; ஆனால் அவரது இத்திட் டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அனும திக்கவில்லை’ என்று மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
2 mins
December 03, 2025
Dinamani Virudhunagar
வீட்டுக் கூரைகளில் சூரியமின் உற்பத்தி இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.5,780 கோடி கடன்
வீடுகள், கட்டடங்களில் மேற்பகுதியில் சூரியமின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதை மேலும் துரிதப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு ரூ.5,780 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Virudhunagar
பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Virudhunagar
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Virudhunagar
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Virudhunagar
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Virudhunagar
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Listen
Translate
Change font size
