Essayer OR - Gratuit
இலக்கியச் செல்வர் - நெஞ்சம் நிறைந்த நினைவுகள்!
Dinamani Virudhunagar
|April 10, 2025
முதல்கை நண்பரும் இலக்கியச் செல்வருமான குமரி அனந்தனும் நானும் கடந்த காலத்தில் தோளோடு தோள் இணைந்து பெருந்தலைவர் காமராசரின் நிழலில் தொண்டாற்றிய அந்த நாள்கள் எங்கள் வாழ்க்கையின் பொன்னான நாள்களாகும்.
-
மதுரையில் உள்ள வெற்றிப் பயிற்சி கல்லூரியில் அவர் பணியாற்றி வந்தார். நானும், அவரும் அப்போது நண்பர்களானோம். இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டோம். அரசியலில் அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்தார். நான் அண்ணன் ஈ.வெ.கி. சம்பத் நடத்திய தமிழ்த் தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருந்தேன். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் எங்கள் நட்பு தொடர்ந்தது.
புவனேஸ்வரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சோஷலிச கருத்துடையவர்கள் அனைவரும் காங்கிரஸில் வந்து இணையுமாறு காமராசர் விடுத்த அழைப்பினை ஏற்றுத் தமிழ்த் தேசிய கட்சியைக் காங்கிரஸுடன் ஈ.வெ.கி. சம்பத் இணைத்தார். எங்கள் நட்பு இன்னும் நெருக்கமாயிற்று.
1965-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் அன்று சென்னையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு அவரை தமிழக இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராகத் தேர்ந்தெடுத்தது. மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அவரின் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் இயக்கம் தீவிரமாக பணியாற்றியது.
1968-ஆம் ஆண்டு காமராசர் சோவியத் நாடு சென்று திரும்பியதையொட்டி அவரை வரவேற்கும் வகையில் மாவட்டந்தோறும் இளைஞர் காங்கிரஸ் பேரணிகளை நடத்துவதென முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் காங்கிரஸ் பேரணிகள் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டன.
1967-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ஆம் நாள் முதல் பண்டித நேரு பிறந்த நவம்பர் 14-ஆம் நாள் வரை 44 நாள்களுக்குக் குமரி முனையில் தொடங்கி சென்னை வரை 625 கல் தொலைவில் குமரி அனந்தன் தலைமையில் 100 இளைஞர்கள் காந்திய நெறி நடைப்பயணம் தொடங்கினர்.
குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற அறநெறிப் பயணம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் புத்துணர்வை ஊட்டியது.
1966-ஆம் ஆண்டு ஜூன் 20 முதல் 10 நாள்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பச்மாரி என்னும் மலை நகரில் இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாம் ஒன்று அகில இந்திய அளவில் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து குமரி அனந்தன், முதுகுளத்தூர் சோ. பாலகிருட்டிணன், சென்னையைச் சேர்ந்த கேசவ மணி ஆகியோருடன் நானும் அந்த முகாமில் கலந்து கொண்டேன்.
Cette histoire est tirée de l'édition April 10, 2025 de Dinamani Virudhunagar.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Virudhunagar
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Virudhunagar
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Virudhunagar
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Virudhunagar
அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
'வேறுபாடுகளைக்கடந்து கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கிராண்ட் பிரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 தங்கம்
செக் குடியரசில் நடைபெற்ற 56-ஆவது கிராண்ட் பிரீ உஸ்தி நாட் லேபம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களைக் கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Translate
Change font size
