Facebook Pixel கரோனா பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் | Dinamani Villupuram - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

கரோனா பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம்

Dinamani Villupuram

|

June 01, 2025

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, மே 31: தமிழகத்தில் அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் கரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. எனினும், கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் செயல் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது, அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பரவல் குறைவு: இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனா தொற்று சமூக பரவலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வீரியமிழந்த ஓமைக்ரான் வகை கரோனா வைரஸ்களான ஜெ.என்.1, எக்ஸ்இசி போன்றவையே காணப்படுவதாகவும், புதிதாக எவ்வித உருமாறிய கரோனா வைரஸ்களும் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் தற்போது வரை 91,583, இந்திய அளவில் 1,800 கரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மே மாதத்தில் 293 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 148 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர். கரோனா பரவல் சமூகத்தில் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர தொற்றுக்கான அறிகுறிகளும் காணப்படவில்லை.

PLUS D'HISTOIRES DE Dinamani Villupuram

Dinamani Villupuram

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Villupuram

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Villupuram

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Villupuram

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Villupuram

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Villupuram

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

நீலகிரி மாவட்ட சுகாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எஸ்பிஐ ரூ.1.59 கோடி நிதி

தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி 'சிஎஸ்ஆர்' நிதியை வழங்கியுள்ளது.

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size