Essayer OR - Gratuit
இந்தியா வெறும் கல்விச் சந்தையல்ல!
Dinamani Tiruvarur
|August 20, 2025
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியச் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், தங்கள் சொந்த நாட்டின் பாடத்திட்டங்களை அப்படியே இங்கே திணித்தால், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அறிவு மரபுகளையும், தனித்துவமான கலாசார செழுமையையும் அவை புறக்கணிக்கக்கூடும்,
பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் குஜராத்தின் அகமதாபாதில் உள்ள கிஃப்ட் சிட்டி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற இந்திய பெருநகரங்களில் தங்கள் வளாகங்களை அமைக்கும் திட்டங்கள், இந்திய உயர் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன. உலகளாவிய கல்வி மையமாக உருவெடுக்கும் இந்தியாவின் லட்சிய பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
அதேநேரம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்திய வருகை, ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்புகிறது. இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் இந்திய மாணவர்களுக்கு அறிவைப் போதிக்கும் இடங்களாக மட்டுமே இருக்குமா? அல்லது இந்தியக் கல்வி முறையிலிருந்தும், நமது கலாசாரத்திலிருந்தும் அவர்களும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்களா? அதாவது, இருதரப்புக்கும் பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் தளமாக அவை மாறுமா? என்பது தான் அது.
இந்திய உயர் கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் காலடி வைப்பதற்கு வழிவகுத்த பின்னணியிலிருந்து தொடங்குவது, இந்தப் புதிய அத்தியாயத்தின் நோக்கத்தையும் தாக்கத்தையும் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும்.
உலகத் தரவரிசையில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்கலாம் என்ற தொலைநோக்குத் திட்டத்தை 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2023-இல் இதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்தது.
இந்த விதிமுறைகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சில முக்கியச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், அவை தங்கள் சொந்த நாட்டு வளாகங்களில் வழங்கும் பட்டங்களுக்குச் சமமான பட்டங்களை இந்தியாவிலும் வழங்க முடியும். மேலும், ஊழியர்களை நியமிப்பது, நிதி நிர்வாகம் மற்றும் கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் அவற்றுக்குக் கணிசமான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
Cette histoire est tirée de l'édition August 20, 2025 de Dinamani Tiruvarur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
நோய்நாடி நோய்முதல் நாடி...
நாடுதோறும் நீதிமன்றங்கள் நிறைய இருக்கின்றன.
3 mins
April 25, 2026
Dinamani Tiruvarur
ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி!
தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Tiruvarur
வாக்காளர்களுக்கு பாராட்டு
வாக்காளர் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Tiruvarur
ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்த தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
April 25, 2026
Dinamani Tiruvarur
கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை
வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.
2 mins
April 25, 2026
Dinamani Tiruvarur
சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
வங்கதேசத்தை வென்றது இலங்கை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
விஜேடி பல்கலை.- டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்
மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
போதுமலைக்கு முதல்முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதல்முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.
1 min
April 23, 2026
Translate
Change font size

