Essayer OR - Gratuit
நிழலின் அருமையும் வெயிலின் பெருமையும்!
Dinamani Tiruvarur
|May 20, 2025
மின்சாரம் வந்த பிறகு, பௌர்ணமி நிலவின் அழகும் அமாவாசை இருளின் செறிவும் அறியப்படாது போயின. சுழலும் மின் விசிறிகள் வந்த பிறகு, தென்னை, பனை ஓலை விசிறிகள் காணாமல் போய்விட்டன. கதிரொளி படாத சுனையின் குளிர் நீரை, பிரிட்ஜ் பெட்டிகள் தருகின்றன. குளிரக் குளிரக் காற்று தரும் ஏ.சி. கருவிகள் மலிந்துவிட்டன.
-
கொளுத்தும் கோடை வெயிலில், வியர்வை அருவியாய் ஊற்றெடுத்து, உடலெங்கும் நனைத்து ஓடும் ஆறாக நீளும்போது நிழல் தேடி ஏங்கும் மனது, 'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்ற பழமொழியை உருவாக்கியது. இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க வெப்பத்தின் திட்பத்தைச் செருப்பு முதலான காலணிகள் இல்லாதுபோக்கிவிட்டன.
அருமையும் கொடுமையும் அளவைப் பொருத்தே அமைகின்றன. காலம் அதற்குக் காரணமாகிறது. உண்மையில் நம்மைவிடவும் வெயிலை அனுபவிப்பவை, தாவரங்கள். வெயிலை உணவாக்கும் வித்தையைக் கற்றவை, தாவரங்களேயாம். அதனால் தான், மணிவாசகப் பெருமான், இவ்வுலகத்தைத் 'தாவர சங்கமம்' என்று பாடுகிறார்.
மகாகவி பாரதியாரின் வசனகவிதையில், 'ஜகத் சித்திரம்' என்றொரு கவிதை நாடகம் இருக்கும். அதில், பசுமாடு சொல்கிறது: 'வெயிலைப் போல் அழகான பதார்த்தம் வேறில்லை. வெயிலைச் சுடச் சுடச் சுவைத்து உண்பவை மாடுகள். கொளுத்தும் வெயிலில் பச்சைப் புல்லை மேயும் பசுக்கள் அதன் சூடு குறையாமல், சுவை கூட்டி கறக்கும் பாலில் இறக்கி வைக்கின்றன.
வைட்டமின் டி தரும் சூரிய ஒளி, தானும் உணவாகி, கீரை, காய், கனி, தானிய மணிகள் எனத் தரும் தாவரங்களை விளைவித்து மேலும் உணவு தரும் தாயாகிச் சிறக்கிறது. வெயில் வருமுன் திட்டமிட்டு, உணவுப் பொருள்களையும், தானியமணிகளையும் வெளியில் பரத்தி உலர்த்தி விடுவதும், நிழல் வருமுன் அவற்றைத் தொகுத்து அள்ளி வைப்பதும் வேளாண் மக்களின் வேலையாக இருந்தது.
கதிரடித்து 'ராசி' என்னும் அரிசி இல்லாத பதர்களை நீக்கி, அரைகுறையாய் விளைந்த 'கருக்காய்' நெல்களை ஒதுக்கி, முழுமையாய் விளைந்த நெல்மணிகளைப் பாதுகாக்க, வெயிலின் பயன்பாடு மிகவும் தேவை. அதற்கு மட்டுமல்ல, அடித்துத் துகைக்கப்பட்ட தோகைகளை வைக்கோல் ஆக்குவதற்கும் கதிரவனே கதி. அதனால் தான், தை முதல் நாள் அக்கதிரவனுக்கு நன்றி சொல்லி வைக்கப்படுகிறது, பொங்கல்.
Cette histoire est tirée de l'édition May 20, 2025 de Dinamani Tiruvarur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Tiruvarur
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக
சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Tiruvarur
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
1 min
May 05, 2026
Translate
Change font size
