Essayer OR - Gratuit
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
Dinamani Tiruvannamalai
|November 01, 2025
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
தொடரில் வரும் ஒரு கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, 'உங்கள் வில்லத்தனத்துக்கு ஓர் அளவே இல்லையா? ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள்? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா' போன்ற கேள்விக் கணைகளைத் தொடுத்து தாங்களும் கொந்தளித்தார்கள். இதைப் பார்க்க பார்க்க வேடிக்கையாக இருந்தது.
வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள், 'இந்தக் கேள்விகளை இயக்குநரிடம் கேட்காமல் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்' என நேரடியாக சொல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப எதை எதையோ சொல்லி சமாளித்தார்கள். முன்பு திரைப்படங்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறியாத மக்கள் அதை உண்மை என்றே கருதி அதில் வரும் வில்லன்-வில்லிகளை திரையரங்கைவிட்டு வெளியே வந்ததும், மண்ணை வாரி தூற்றிச் சபிப்பார்கள். அன்று இருந்த தலைமுறையினர் இன்னும் மிச்சம் இருக்கிறார்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது அவர்களது செயல்கள்.
ஒரு திரைப்படத்தைப் பார்த்தால்கூட அதன் கதையம்சத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றி சில நாள்கள் பேசி விட்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவோம். ஆனால், இந்த நெடுந்தொடர்கள் தினமும் நம் வீட்டுக்குள் வந்து கதவைத் தட்டுகின்றன. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஓர் அலைவரிசை சேவையில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து நெடுந்தொடர்களை ஒளிபரப்புகிறார்கள். அதை நாள் முழுவதும் அமர்ந்து பார்க்கும் மனநிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.
பல வீடுகளில் பெண்மணிகள் வீட்டு வேலைகள் முடிந்ததும் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி இடைவெளியே இல்லாமல் பிற்பகல் 3 மணி வரை பார்க்கின்றனர். பின்னர், மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நெடுந்தொடர்களைக் கண்டு துக்கப்படுகின்றனர். இதில் இன்னும் சில வகை பெண்கள் இடையிடையே ஒளிபரப்பப்படும் விளம்பர இடைவேளைகளைக் கூட விடுவதில்லை. அந்த நேரத்தில் வேறு வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றி இன்னும் இரண்டு நெடுந்தொடர்களைக் கூடுதலாக கண்ணுற்று சாமர்த்தியமாக நேரத்தை மிச்சம் பிடிக்கின்றனர்.
Cette histoire est tirée de l'édition November 01, 2025 de Dinamani Tiruvannamalai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Tiruvannamalai
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvannamalai
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Tiruvannamalai
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tiruvannamalai
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvannamalai
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvannamalai
சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் தந்தை, மகள், மருமகன் உயிரிழந்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Tiruvannamalai
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvannamalai
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvannamalai
அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா
அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவர்
1 mins
June 07, 2026
Listen
Translate
Change font size
