Facebook Pixel ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி! | Dinamani Tiruvannamalai - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!

Dinamani Tiruvannamalai

|

May 19, 2025

2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.

நூறு ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய நாட்டை, இயற்கை வளம், அறிவாற்றல், ஆன்ம பலமுள்ள மக்களைக் கொண்ட நாட்டை, அப்படியே கொடுத்தால் உலக வல்லரசாகி விடுவார்கள் என பிரிட்டன் காலனிய அரசு நினைத்தது. அதனால்தான், முஸ்லிம்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற, 'முஸ்லிம் லீக்'கின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவை இரண்டாகப் பிளந்தனர். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது.

இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பல கோடி ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால், ஆனந்தக் கண்ணீரோடு பெற வேண்டிய சுதந்திரத்தை, ரத்தக் கண்ணீரோடு பெற்றோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதமராக, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபபாய் படேலின் உறுதியான நடவடிக்கையால் இன்றைய இந்தியா கட்டமைக்கப்பட்டது. ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆயுதமேந்திய கும்பலை அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. அத்துடன் நிற்காமல் இந்தியாவின் பிரிக்க முடியாததொரு அங்கமான காஷ்மீர் பள்ளத்தாக்கையும் அபகரிக்கும் நோக்கத்தில் அன்று முதல் இன்று வரையில் பயங்கரவாத செயல்களை அங்கே பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

'இந்தியாவுடன் நேரடியாக மோதி, ஒரு நாளும் வெல்ல முடியாது' என்பது பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் தெரியும். அதனால்தான், பல பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம், ஆயுதம், பயிற்சி கொடுத்து அவர்கள் வாயிலாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும்போதெல்லாம், இந்திய அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடம், பாகிஸ்தானின் பயங்கரவாதப் பின்னணியை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும். உலகின் பல முக்கிய நாடுகளிடமும், பயங்கரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான் துணை நின்றதற்கான ஆதாரங்களை வழங்கும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvannamalai

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Tiruvannamalai

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvannamalai

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvannamalai

கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக, மஜத எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு

கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இது, அந்தக் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 mins

June 20, 2026

Dinamani Tiruvannamalai

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 4 மணி நேரத்தில் விசாரணையை முடித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvannamalai

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvannamalai

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time to read

2 mins

June 20, 2026

Translate

Share

-
+

Change font size