Essayer OR - Gratuit
எஸ்.ஜே.ஆர்: விளக்கங்களும், குழப்பங்களும்!
Dinamani Tiruvallur
|November 13, 2025
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்.ஐ.ஆர்) வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்கள் பிரச்னைகளை எதிர்கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் பல அம்சங்கள் தொடர்பாக தெளிவற்ற நிலை தொடர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதையடுத்து, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கியுள்ளது.
கடைசியாக, 2025, ஜன.1-இல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பதில், வாக்காளர்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தப் படிவத்தில் மூன்று பிரிவுகளில் தகவல்கள் கேட்கப்படுகின்றன.
முதல் பிரிவில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதாவது, பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண், பெற்றோர் பெயர்கள், கணவர் அல்லது மனைவியின் பெயர் போன்றவற்றை அளிக்க வேண்டும்.
இரண்டாவது பிரிவில், முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தின் போது (2002 - 2005) இடம்பெற்றிருந்த தகவல்களை அளிக்க வேண்டும். வாக்காளரின் பெயர், முந்தைய அடையாள எண், உறவினரின் பெயர், மாவட்டம், தொகுதி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
மூன்றாவது பிரிவில், உறவினர்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதாவது, இரண்டாவது பிரிவில் எந்த உறவினரின் பெயர் அளிக்கப்பட்டதோ அவர்களைப் பற்றிய விவரங்களை இங்கே எழுத வேண்டும்.
வாக்காளர் தங்களது சுய விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்வதில் எந்தப் பிரச்னையும் எழுவதில்லை. ஆனால், அந்தப் படிவத்தில் இதற்கு முன்பு கடந்த 2002, 2005 ஆம் ஆண்டுகளில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பட்டியலில் இருக்கும் விவரங்களை தற்போது அளிப்பதில் வாக்காளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
Cette histoire est tirée de l'édition November 13, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
அருங்காட்சியக அதிசயம்!
முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Tiruvallur
ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவு: க.கிருஷ்ணசாமி
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததன் மூலம், ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Tiruvallur
சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
கலம் தொடா மகளிர்
சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.
1 mins
May 17, 2026
Dinamani Tiruvallur
'நீட்' தேர்வு மூலம் ஊழல் நடக்கிறது: கி.வீரமணி
நீட் தேர்வு மூலம் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி
சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.
1 mins
May 17, 2026
Dinamani Tiruvallur
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Tiruvallur
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Listen
Translate
Change font size
