Facebook Pixel கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார் | Dinamani Tiruvallur - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

Dinamani Tiruvallur

|

July 20, 2025

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து (77) சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 19) காலமானார்.

சென்னை, ஜூலை 19:

முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ஆம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-இல் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய அவர், ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’, ‘இங்கேயும் மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனிப்பாணியை அமைத்துக் கொண்டார்.

மு.க.முத்துவின் தாயார் பத்மாவதியின் சகோதரர், சிதம்பரம் ஜெயராமன் ஆவார். இசைக் குடும்பத்தில் இருந்து வந்த மு.க.முத்துவும் நன்றாகப் பாடல்களைப் பாடும் திறமை பெற்றிருந்தார். ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் இன்றும் பலரால் ரசிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

கடைசியாக 2008-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘மாட்டுத்தாவணி’ படத்தில் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார் மு.க.முத்து.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு

தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு

ஜி7 தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

சிவகங்கைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

நடிகர் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.

time to read

1 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size