Essayer OR - Gratuit
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
Dinamani Tiruchy
|January 03, 2026
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
அனைத்தும் மக்களைச் சென்று சேர்வது இல்லை. போகிற வழியிலேயே கரைந்து திசைமாறிப் போகின்றன. ஒரு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி வேறு திட்டங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றன. திட்டங்கள் வெறும் திட்டங்களாக இருக்கின்றனவே தவிர, செயல்பாட்டுக்கு வருவது இல்லை. இப்படி ஒரு திட்டம் போடப்பட்டதே மக்களுக்குத் தெரிவதும் இல்லை.ஆனால், நூறு நாள் வேலைத் திட்டம் கிராம மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்தது. செயல்படுத்தப்படும்போது குறைபாடுகளும், ஊழல்களும் இருந்தது என்பது உண்மைதான். அதையும் மீறி கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு நூறு நாள்களுக்கு வேலை உறுதி இருந்தது. என்பதை மறுக்க முடியாது.
இப்போது அந்தத் திட்டத்துக்கு மாற்றாக, 'வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபிஜி ராம்-ஜி) என்ற புதிய திட்டம் கடந்த 2025 டிசம்பர் 16 -ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய திட்டத்துக்கு முழு நிதியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இனி மத்திய அரசும், மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் நிதியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2005-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், 'தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்' என்று அழைக்கப்பட்டு, பிறகு 2009-இல் மகாத்மா காந்தி பிறந்த நாளில், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் 2008-09ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பின் மூலம் பொது சொத்துகள் உருவாக்கப்படுகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துகள் அனைத்தும் கைப்பேசி செயலி மூலம் பணியின் விவரங்களைக் புவியிடக் குறியீடுகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
Cette histoire est tirée de l'édition January 03, 2026 de Dinamani Tiruchy.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruchy
Dinamani Tiruchy
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tiruchy
சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்
சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tiruchy
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Dinamani Tiruchy
காங்கிரஸ் குறித்த திமுகவின் விமர்சனம் ஏற்புடையதல்ல
கார்த்தி சிதம்பரம்
1 mins
May 15, 2026
Dinamani Tiruchy
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tiruchy
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tiruchy
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruchy
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
