Facebook Pixel போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை | Dinamani Thoothukudi - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை

Dinamani Thoothukudi

|

May 06, 2025

எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மே 5: எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதலை எந்நேரமும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறையின் கீழ் உள்ள தீயணைப்பு சேவை, குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை தலைமை இயக்குநர் மூலம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் திங்கள்கிழமை மாலையில் அனுப்பப்பட்டது.

அதன் விவரம்: அடிப்படை தயார்நிலை: வான் வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மாநிலங்களை உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

PLUS D'HISTOIRES DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Thoothukudi

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,06,400-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

தேசிய நல்லாசிரியர் விருது தமிழக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தமிழக ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

ரூ. 2 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: தம்பதி, இடைத்தரகர் கைது

சேலத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு விற்றதாக தம்பதி, இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Thoothukudi

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Thoothukudi

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Translate

Share

-
+

Change font size