Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

அடர்த்தியின் அபாயம்!

Dinamani Salem

|

May 08, 2025

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.

- டி.எஸ். தியாகராசன்

இது நாள் வரை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எனப் பெயர் பெற்றிருந்த வல்லரசு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பாரதம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது மனித வளத்தின் வளர்ச்சி அறிகுறியா? இல்லை அடர்த்தியின் அபாய குறியீடா? என்பதை மானுடவியல் ஆய்வாளர்களும், புவியியல் விஞ்ஞானிகளும், பொருளாதார வல்லுநர்களும், இன்ன பிற துறை சார்ந்த அறிஞர்களும் காலம் தாழ்த்தாது உடனே சிந்தித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் மகாகவி பாரதி, 'முப்பது கோடி முகமுடையாள், நாங்கள் முப்பது கோடி ஜனங்களும், முப்பது கோடி வாய் முழங்கவும், முப்பது கோடியும் வாழ்வோம்' என்று தனது கவிதைத் தோட்டத்தில் 30 கோடி மலர்களாக பாரதத்தின் மக்கள்தொகையை வர்ணித்தார். இன்றைக்கு 142 கோடியாக பல்கிப் பெருகியுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் செய்திராத சாதனையை, பாரதம் தனது மக்கள்தொகைப் பெருக்கத்தால் சாதித்துள்ளது. 12,69,219 சதுர மைல் பரப்பு உள்ள நம் நாட்டில் 142 கோடி மக்கள்தொகை. எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

திருக்கோவலூரில் இடைகழியில் ஒருவர் படுத்திருந்த இடத்துக்கு மற்றொருவர் வர அவ்விருவரும் அமர்ந்து கொண்டனர். மீண்டும் ஒருவர் வர, பின்னர் மூவரும் எழுந்து நிற்க என ஆழ்வார்கள் பாடிய திருப்பாசுரம் குறிப்பிட்டதைப் போல பாரதத்தில் மக்கள் அனைவருக்கும் நிற்க இடமாவது இருக்குமா? என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொன்று.

சீனாவின் தற்போதைய மக்கள்தொகை 140 கோடிதான். நிலப்பரப்பில் பாரதத்தைவிட இரண்டு மடங்கென விரிந்துள்ளது. ஆம். 37,05,407 சதுர மைல். உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் மக்கள்தொகை 33 கோடி 29 லட்சம் மட்டுமே! இதில் உலகெங்கினும் உள்ள பிற நாட்டவர் குடியேறியவர்களின் தொகையும் சேர்ந்துள்ளது. ஆனால், நிலப்பரப்போ 37,96,742 சதுர மைல். பாரதத்தின் நிலப்பரப்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

ஒருகாலத்தில் பிரித்தானிய பேரரசு தனது காலனி நாடாகக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை வெறும் 2 கோடியே 73 லட்சம்தான். ஆனால், நிலப்பரப்போ 29,68,464 சதுர மைல். இதுவும் பிரித்தானிய அரசு அன்றைய நாளில் தனது காலனி நாடுகளில் அவர்களின் சட்டப்படி குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்டவர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்திய பிறகும்!

PLUS D'HISTOIRES DE Dinamani Salem

Dinamani Salem

தளி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

தளி அருகே யானை தாக்கியதில் கர்நாடக விவசாயி உயிரிழந்தார்.

time to read

1 min

January 29, 2026

Dinamani Salem

விமான விபத்தில் அஜீத் பவார் மரணம்

விமானிகள் உள்பட மேலும் 4 பேர் உயிரிழப்பு

time to read

1 mins

January 29, 2026

Dinamani Salem

அஜீத் பவார் - ஆறு முறை துணை முதல்வர்

விமான விபத்தில் உயிரிழந்த அஜீத் பவார், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆறு முறை துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.

time to read

1 min

January 29, 2026

Dinamani Salem

டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.891 கோடி

46% அதிகரிப்பு

time to read

1 min

January 29, 2026

Dinamani Salem

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

time to read

1 mins

January 29, 2026

Dinamani Salem

சென்னையில் நாளை டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் தொடக்கம்

டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026, சென்னை வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் வியாழக்கிழமை (ஜன.

time to read

1 min

January 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பு

பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பை தமிழக அரசு தொடர்ந்து உருவாக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.

time to read

2 mins

January 28, 2026

Dinamani Salem

அல்கராஸ் - ஸ்வெரெவ் | சபலென்கா - ஸ்விடோலினா

அரையிறுதியில் மோதும்

time to read

1 min

January 28, 2026

Dinamani Salem

பிப்.1 முதல் பிரசாரம்: திமுக அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்.

time to read

1 min

January 28, 2026

Dinamani Salem

இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!

தந்தறிவு உயிரினங்கள் இன்னொரு உயிரைப் பார்க்கும்போது ஒன்று அவற்றை 'இரையா' என்று பார்க்கும்!

time to read

3 mins

January 28, 2026

Translate

Share

-
+

Change font size