Essayer OR - Gratuit

சமூக ஒற்றுமையும் அரசமைப்பு சாசனமும்...

Dinamani Puducherry

|

July 14, 2025

அரசுகள் கொண்டுவரும் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பதை அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், அதற்கான மூலக் காரணத்தைத் தொட அரசுகள் மறுக்கின்றன.

- பேராசிரியர்

அறிவார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் இன்று அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க அரசமைப்புச் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களை மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கக் கொள்கை ஒன்றை உருவாக்குங்கள் என்பதுதான் அந்தக் கோரிக்கை. இவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்; இவர்கள் ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று பணியாற்றிய சமூக உணர்வாளர்கள்.

ஏன் இந்தக் கோரிக்கையை வைக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் காட்டும் காரணமும், ஆதாரமும் யாராலும் மறுக்க இயலாது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அதிகாரத்தைப் பிடிக்க நடத்தப்படும் போட்டியில் வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள நம் அரசியல் கட்சிகள் செய்யும் செயல்கள் சமூக ஒற்றுமையைத் தகர்த்துக் கொண்டே வருகின்றன. அதுமட்டுமல்ல சமூகப் பிணக்குகளும், வன்முறையும் அதிகரித்து வருகின்றன.

சமூகப் பிணக்கும், சமூகப் பிரிவினைகளும், எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகளும், வன்முறையும் மக்களாட்சிக்கு எதிரான கூறுகள். இவை அனைத்தும் ஒரு நாட்டில் செயல்பட்டால் மக்களாட்சியில் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கொண்டு சேர்க்க இயலாது.

இந்தியாவில் 146 கோடி மக்களில் 82 கோடி மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்புக்குப் பொது விநியோகத் திட்டத்தில் கிடைக்கும் விலையில்லா உணவுப் பொருள்களை நம்பி இருப்பதும், 42 கோடி மக்கள் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இன்றி வாழ்வதும் இதன் விளைவுகள் தான்; இதைத்தான் உலக வங்கி நம்மைச் சரி செய்யக்கூறி அறிவுறுத்துகிறது. இந்தச் சூழல் மக்களாட்சிக்கும் நல்லதல்ல; சமூக ஒற்றுமை, அமைதி, மேம்பாடு இவற்றுக்கும் உகந்தது அல்ல.

இந்தச் சூழலை இனிமேலும் நாம் அனுமதித்தால் மக்களை நம் அரசியல் ஆளுகைச் செயல்பாட்டால் வன்முறைக்குள் தள்ளுகிறோம் என்பதுதான் பொருள். இந்த நிலையில்தான், நம் அரசியல் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அரசியலை முன்னெடுத்து, இந்திய மேம்பாட்டு வரலாற்றில் எந்தெந்த ஜாதிகள் மேம்பட்டிருக்கின்றன, எந்தெந்த ஜாதிகள் மேம்பட முடியவில்லை என்பதைக் கண்டறிய முயல்கின்றன.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

time to read

2 mins

January 14, 2026

Dinamani Puducherry

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலருடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய கொசபலேவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளிடம் விசாரணை: உச்சநீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு

ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் முன் அனுமதி பெறுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவலர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூர் கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதல்நிலைக் காவலரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்

time to read

1 mins

January 14, 2026

Dinamani Puducherry

அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.

time to read

1 min

January 13, 2026

Dinamani Puducherry

அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Puducherry

தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

January 13, 2026

Translate

Share

-
+

Change font size