Essayer OR - Gratuit
தரவுகள் பேசட்டுமே...
Dinamani Puducherry
|July 10, 2025
கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அர்த்தமில்லை. நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலக நடைமுறைகளின் படி அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.
தமிழ் மொழியும் அதைப் பேசும் மக்களும் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் நம்மை வாழ்வித்து வருவதோடு உலகின் மிக மூத்த மொழிகளுள் ஒன்றென நிற்கிறது. இதனால் தான், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமிதம் கொள்கிறோம்.
இலக்கியங்கள் மொழியின் தொன்மையைச் சொல்கின்றன. அம்மொழி பேசும் மக்களின் நாகரிகத்தை நிறுவுவதற்கு கற்பனை கலந்த இலக்கியம் மட்டுமே சான்றாகாது. பிற சான்றுகள் தேவைப்படுகின்றன. அதற்கு அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன.
அகழாய்வு என்பது அறிவியல் அணுகுமுறை கொண்டது. உலகம் முழுவதும் அகழாய்வை ஒப்புக்கொள்வதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பல வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களும், மானுடவியல் ஆராய்ச்சியாளர்களும் தொன்மையான மனித வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அகழாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவைப் பொருத்தவரை, உலகின் முதல் நூல் என்று சொல்லப்படும் ரிக் வேதம் நம்முடையது. அது 1028 சூக்தங்களில் 10,600 ஸ்லோகங்களைக் கொண்டது. அதிலே பொற்காசுகள், பொன்னாலான ஆபரணங்கள், தங்கம் கிடைத்த இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பை உறுதி செய்யும் அமைப்புகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வானியல் பற்றிய அறிவியல் இருக்கிறது. ரிக் வேத காலத்தை ஆராய்ந்த ஜெர்மனி அறிஞர் ஜாகோபி கி.மு. 6000 என்று முடிவுக்கு வந்தார்.
உலக நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள், அயல்நாட்டுத் தூதுவர்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. திரைகடல் வணிகம் பற்றிய தகவல்கள், வானியல் குறிப்புகள் இருக்கின்றன. நிர்வாகம், கலைகள், ஆயுதங்கள், அணு முதல் உளவியல் வரையிலான இன்றைய உலகம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அறிவியலைத் தொல்காப்பியம் என்ற ஒற்றை நூலே பேசிவிடுகிறது. இத்தகைய இலக்கிய வளம் நமது தொன்மையைச் சொல்ல ஏற்கெனவே இருக்கிறது.
Cette histoire est tirée de l'édition July 10, 2025 de Dinamani Puducherry.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry
Dinamani Puducherry
எண்ணமே வாழ்வு!
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.
2 mins
January 08, 2026
Dinamani Puducherry
டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Puducherry
பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.
2 mins
January 08, 2026
Dinamani Puducherry
அதிமுக கூட்டணியில் பாமக
எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு
1 min
January 08, 2026
Dinamani Puducherry
உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.
3 mins
January 08, 2026
Dinamani Puducherry
பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது
இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.
1 min
January 07, 2026
Translate
Change font size
