Facebook Pixel மனிதம் சொல்லும் மரபு | Dinamani Puducherry - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

மனிதம் சொல்லும் மரபு

Dinamani Puducherry

|

July 07, 2025

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். ஒரு சிறு உதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பதுபோல் நம்பிக்கை துளிர்விடும்.

- வெ.இன்சுவை

வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள் இருக்கும்; ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுபோல நல்லவர்களும், தீயவர்களும் சேர்ந்ததுதான் இந்த உலகம். மனிதர்களில் எல்லோருமே புத்தர்களாக, உத்தமர்களாக, நீதிவான்களாக, தர்மசிந்தனை உடையவர்களாக, அறவழியில் நடப்பவர்களாக, சத்தியத்தைத் தாங்கிப்பிடிப்பவர்களாக, சமுதாய அக்கறை கொண்டவர்களாக இருப்பதில்லை.

தராசுத் தட்டுக்களைப் போல சமமாக இருக்க முடியாது. சமூக ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, எங்கு பார்த்தாலும் அடாத செயல்கள் நடப்பது போலவும், எல்லோரும் காமக் கொடூரர்களாகவும், ரத்தவெறி பிடித்து அலைபவர்வர்களாகவும் தெரிகிறார்கள். நமக்கும் மனித குலத்தின் மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து வருகிறது. நம்முடன் பழகும் அனைவரும் ஆதாயத்துக்காகவும், உள்நோக்கத்துடனும்தான் பழகுகிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம்.

நாம் ஒருவருடனும் உள்ளன்புடன் பழகாமல் தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள். மனசு முழுக்க கருணையையும், அன்பையும் நிரப்பிக் கொண்டு எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். சமுதாய நலனுக்காக, பொருள் நிறைந்தவர்கள் பணத்தையும், அல்லாதவர்கள் உடல் உழைப்பையும் நல்குகிறார்கள். பால் நினைந்தாடும் தாயைப்போல பரிவு காட்டுகிறார்கள்.

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உற்றுழி உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். பெரிய உதவி என்று இல்லை. ஒரு சிறுஉதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பது போல் அவர்களின் நம்பிக்கை துளிர்விடும்.

பசுமையைப் பார்த்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி என்பதைப்போல, பலர் செய்யும் நல்ல செயல்களைப் பார்க்கும் போது மனசுக்குள் பன்னீர் தெளித்ததைப்போல இருக்கிறது. இறுகிய பாறை நெகிழ்வது போல இதயம் நெகிழ்கிறது. சட்டென வாழ்வு இனிமையாகிறது.

பிறருக்கு உதவி செய்யும்போது, அதுதரும் ஆனந்தம் எல்லையற்றது. நாம் காட்டும் சின்னச் சின்ன அன்பில் குளிர்ந்து போகின்றன பல உள்ளங்கள். உதவி பெறுபவர்களின் முக மலர்ச்சி நம் வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Puducherry

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Puducherry

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Puducherry

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Puducherry

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Puducherry

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Puducherry

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Puducherry

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size