Facebook Pixel பகைமை வேண்டாம்! | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

பகைமை வேண்டாம்!

Dinamani Perambalur & Ariyalur

|

August 02, 2025

போர் என்பது பேரழிவு, பொருளாதார நாசத்தைத் தரும் என்பது எல்லா நாட்டுத் தலைவர்களுக்கும் தெரியும். இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண ஒவ்வொரு தலைவரும் முயல வேண்டும் என்று நமது பிரதமரும் உலகத்தை நோக்கி வலியுறுத்தியுள்ளார்.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

பத்தாம் வகுப்பு படித்த போது, ஒரு நாள் சமூக அறிவியல் ஆசிரியர் முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 1914 முதல் 1918 வரை முதல் உலகப் போர், 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றன என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, இப்படி நான்கு, ஆறு ஆண்டுகள் வரை ஒரு போர் தொடருமா என நாங்கள் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஒரு மாணவி மட்டும் எழுந்து, அதற்குப் பிறகு ஏன் மூன்றாம் உலகப் போர் ஏற்படவில்லை? என்று ஆசிரியரை நோக்கி கேள்வி எழுப்பினாள். இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய அழிவுக்குப் பிறகு போரே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை நாடுகள் எடுக்கத் தொடங்கின. மேலும், நாடுகளிடையே ஏற்படும் பிணக்கைப் போக்க ஐ.நா. போன்ற அமைப்புகள் கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றன. அதனால், இனி மூன்றாம் உலகப் போர் ஏற்படாது என்று 1990-இல் எங்களுக்கு பாடம் எடுத்த சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார். அவர் அன்று சொன்ன சொற்களை, போர் மேகங்களோடு சுழலும் இன்றைய உலகோடு பொருத்திப் பார்க்கும் போது கவலை தோன்றுகிறது.

போர் முறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன. இன்றைய போர்க்களங்களை நம்முன் கொண்டுவரும் காணொலிகள் எல்லாம் நெஞ்சைப் பதற வைக்கின்றன. நிவாரண உதவிகள் வழங்கும் வண்டிகளை மக்கள் சூழ்ந்து கொண்டு முட்டி மோதுவதைக் காணும் போது உள்ளம் பதை பதைக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை உணவுக்காக அடித்துக் கொள்வதைக் காண முடியவில்லை.

சில நாள்களுக்கு முன்பு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில், சிறுவன் ஒருவன் உணவுக்காக தாங்கள் படும் அவல நிலையை எடுத்துச் சொல்ல கீழே கிடந்த மண்ணை எடுத்து வாயில் போட்டு, எங்களுக்கு போதுமான அளவு உணவு இல்லை; இனி மண்ணை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சாக வேண்டியதுதான் என்று அழுது கொண்டே கூறினான்.

PLUS D'HISTOIRES DE Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size