Essayer OR - Gratuit
சட்டங்கள், ஆட்சிகள் யாருக்காக?
Dinamani Perambalur & Ariyalur
|July 24, 2025
எந்த நாட்டில் மக்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கு போதுமான கூலியோடு நிறைவடைகிறார்களோ, அந்த நாடே உலகப் பெருமுதலாளிகளின் நாடு! தொழிலாளர்களைச் செக்கிழுக்கும் மாடுகளுக்கு நிகராக நடத்துவார்கள்! உயிர் வாழப் போதுமான சோறு! குறைந்த நேர ஓய்வு! அவ்வளவுதான்!
இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கிறது; பணவீக்கம் கீழ்நிலையில்; ரூபாயின் மதிப்பு நிலையாய் இருக்கிறது என நம்முடைய நிதியமைச்சர் நிர்மலா கையை உயர்த்திப் பேசலாம்! நிர்மலா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்றும் தெளிவாகவும் சரளமாகவும் பேசக் கூடிய முதல் பெண் நிதியமைச்சர். அதிகமான நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த பெருமைக்குரியவர்.
தமிழர்களான நிர்மலா அம்மையாரும், செய்சங்கரும் வேறு மாநிலங்களிலிருந்து தான் வண்டி ஏறித் தில்லிக்கு செல்கிறார்கள்! நிர்மலா அம்மையாரின் காலத்தில் பொருளாதார வளர்ச்சி நிலை வரிசையில் உலக அளவில் பதினொன்றாவது இடத்திலிருந்த இந்தியா, பல நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது வியத்தகு வளர்ச்சிதானே! அது இந்த ஆண்டு சப்பானைப் பின்னுக்கு உட்காரச் சொல்லி, நான்காம் இடத்திற்கு முந்திக் கொண்டிருக்கிறது!
தமிழ்நாடு சுழிநிலையிலிருந்து ஒன்பது விழுக்காட்டு வளர்ச்சியையும், தன் நான்கு ஆண்டு கால ஆட்சியிலேயே பெற்று விட்டது என்பதுபோல முதல்வர் இசுடாலின் பேசும்போது, உலக அரங்கில் இந்தியா நான்காவது இடத்திற்கு வந்தது தன்னால்தான் என்று நிர்மலா அம்மையார் பேசக் கூடாதா?
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் விளையாட்டு விதிகள் மாறி விட்டன. ஒரு சாதாரணக் கடையில், சாதாரணத் தோசை தின்பதற்கு ஐந்து ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை, அடித்தட்டு மனிதன் வரிக் கொடுக்கும் கொடுமை இன்றைக்கு இருக்கிறது!
நடிகர் விசய், அண்ணாமலைக்கெல்லாம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு; அதாவது ஏறத்தாழ இருபத்தெட்டுப் பேர் கொண்ட படையின் பாதுகாப்புத் தேவைப்படுவதால், நாம் ஒவ்வொரு தோசையோடும் ரூபாய் எட்டு வரை வரிக் கொடுக்க வேண்டியதிருக்கிறது!
காலையில் விழித்தவுடன் கடைசித் தரத் தேயிலைத் தூளில் போடப்படும் அரை கிளாசு டீக்கும் தேயிலை வழியாக வரி; அதன் பின்னால் ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்தால் அதற்கும் வரி; அதைப் பற்ற வைக்கத் தீக்குச்சியை உரசினால் அதற்கும் வரி!
Cette histoire est tirée de l'édition July 24, 2025 de Dinamani Perambalur & Ariyalur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ?Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
நியமன ஆணைகள் தாமதம் மருத்துவர்கள் முற்றுகைப் போராட்டம்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தை அவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
1 min
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட ரத்து: தமிழக அரசு உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Perambalur & Ariyalur
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Perambalur & Ariyalur
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Translate
Change font size

