Essayer OR - Gratuit

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

Dinamani Namakkal

|

September 13, 2025

காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

- பெ.கண்ணப்பன்

தமிழ்நாடு காவல் துறையின் அடுத்த தலைமை இயக்குநர் யார்? என்பது தொடர்பான விவாதங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த சூழலில், காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு தலைமை இயக்குநரை தமிழ்நாடு அரசு சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்துள்ளது.

இந்திய மாநிலங்கள் பலவற்றிலுள்ள காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வதில் கடந்த காலத்தில் நிலவிவந்த குளறுபடிகளைக் களைந்து, தலைமை இயக்குநர் நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.

காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிவிட்டு, பொறுப்பு தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அரசு வெளியிடவில்லை. இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள அரசியலை காவல் துறையினர் மட்டுமன்றி பொதுமக்களும் உணர்கின்றனர்.

காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை சில வடமாநிலங்கள் பின்பற்றாமல், தமிழ்நாடு காவல் துறைக்கு பொறுப்பு தலைமை இயக்குநர் நியமனம் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதை நியாயப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.

காவல் துறை நிர்வாகம் என்பது இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால், காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா? என்ற ஐயம் பொதுவெளியில் எழுகிறது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி மாநில காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனமானது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டுதான் செய்யப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பின்பற்றாமல், பொறுப்பு தலைமை இயக்குநரை நியமனம் செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்ற காரணத்தால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PLUS D'HISTOIRES DE Dinamani Namakkal

Dinamani Namakkal

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Namakkal

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Namakkal

இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது ஆர்ய சமாஜம்

பிரதமர் மோடி பாராட்டு

time to read

1 min

November 01, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Namakkal

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Namakkal

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Namakkal

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Namakkal

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Namakkal

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Namakkal

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size