Essayer OR - Gratuit

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல

Dinamani Nagapattinam

|

August 25, 2025

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

புது தில்லி, ஆக. 24:

அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத்தொடரில், பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இடையூறுகள் மற்றும் ஒத்திவைப்புகளால், இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்கள் பெருமளவில் முடங்கிய நிலையில், அமித் ஷா மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேரவைத் தலைவர்கள் கருத்தரங்கில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: நாடாளுமன்றமும் மாநிலப் பேரவைகளும் ஆக்கபூர்வ விவாதங்களுக்கான இடமாகும். ஜனநாயகத்தில் விவாதம் முக்கியமானது. நாடாளுமன்றத்திலோ, பேரவையிலோ விரிவான விவாதம் இல்லையெனில், அவை உயிர்ப்பில்லாத கட்டடங்களாகவே இருக்கும். தேசக் கட்டமைப்பில் அவற்றின் பங்களிப்பும் பாதிக்கப்படும். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண கூட்டு விவாதமே சிறந்த வழிமுறை.

அதேநேரம், எதிர்க்கட்சி என்ற பெயரில், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அமர்விலும் அவை அலுவல்களை முடக்குவது நல்லதல்ல. எதிர்க்கட்சிகள் எப்போதுமே கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேசமும், மக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Nagapattinam

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Nagapattinam

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size