Essayer OR - Gratuit

ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு

Dinamani Karur

|

August 31, 2025

கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு, ஆக. 30:

கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 140 பேர் காயமடைந்துள்ள நிலையில், 32 பேர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

ரியாசி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான பட்டேரில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் முழுவதுமாக மண்ணில் புதைந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நசீர் அகமது (38), அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இதேபோல், ராம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால், இரண்டு சகோதரர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு பள்ளிக்கூடம் சேதமடைந்தது.

தலைவர்கள் இரங்கல்: ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் போன்ற பல தலைவர்கள் இந்தச் சம்பவங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Karur

Dinamani Karur

திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும்

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன்

time to read

1 mins

January 11, 2026

Dinamani Karur

அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Karur

நகரங்களைக் கைப்பற்றுங்கள்!

போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Karur

இணையத்தில் வாசிப்போம்...

கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Karur

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Karur

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Karur

போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size