Essayer OR - Gratuit

கலைகளும் ஆனந்தகுமாரசாமியும்!

Dinamani Karur

|

July 27, 2025

இந்தியக் கலைகளுக்கு, முக்கியமாக ஓவியங்களுக்கும், கலைஞர்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் ஆனந்த குமாரசாமி.

- -டி.ஏம். இரத்தினவேல்

இந்தியக் கலைகளுக்கு, முக்கியமாக ஓவியங்களுக்கும், கலைஞர்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் ஆனந்த குமாரசாமி. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியக் கலைகள், இந்திய ஓவியங்கள் கலையம்சம் அற்றவை என்று மேலை நாட்டவரால் கருதப்பட்டன. இத்தகைய கருத்தை மாற்றிய அற்புத மனிதர் ஆனந்த குமாரசாமி.

“ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக் கலைகள்தான் சிறந்தவை என்று மூடிய மனத்துடன் மற்ற நாட்டு அவலங்களையும் கலையம்சங்களையும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு நாட்டின் ஓவியத்தையும் கலை, கலாசாரப் பண்புகளையும் அந்தந்த நாட்டு மக்களின் மனதைப் புரிந்துகொண்டு பார்த்தால்தான் மற்றவர்கள் அவற்றை ரசிக்க முடியும். காரணம், பார்ப்பவர்களுடைய மனத்தைப் பொறுத்தது. அவர்கள் புரிந்துகொண்ட அந்த நாட்டின் கலாசாரத்தின் அளவைப் பொறுத்தது. நமது மனதுக்கு நாம் நமக்குப் பிடித்தது என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதையே ஓவியத்திலும் விரும்புகிறோம். அப்படி இல்லாமல் கறைபடியாத திறந்த மனதுடன் பார்த்தால் பிற நாட்டு ஓவியங்களையும் ரசிக்க முடியும். பாராட்ட முடியும்” என்று சொல்லி குறை கூறியவர்களின் வாயை அடைத்தவர் ஆனந்த குமாரசாமி.

இலங்கையராகிய தந்தைக்கும், ஆங்கில தாய்க்கும் பிறந்த இவர், கீழை நாட்டுக்குரிய கற்பனைத் திறத்தையும் மேலை நாட்டுக்குரிய முழுமையையும் தம் பெற்றோரிடமிருந்து பரம்பரைச் சொத்தாகப் பெற்றவர்.

இவருடைய தந்தை ஸர். பொ. குமாரசாமி முதலியார். வழக்குரைஞரான இவர், கடந்த நூற்றாண்டின் இடைப் பகுதியில் இலங்கை மாகாண உறுப்பினராக இருந்தார். ஆசியாவின் முதன் முதலாக ஸர் பட்டம் பெற்றவர். தாயார் மிஸ் கெண்ட்டிஷ் புகழ் பெற்ற ஆங்கிலேயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதியருக்கு 1877-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் ஆனந்த குமாரசாமி.

இதனால் ஆனந்த குமாரசாமியிடம் கீழை நாட்டுக்குரிய லட்சிய நோக்கும் மேலை நாட்டுக்குரிய பூர்வமான நோக்கும் இணைந்திருந்தன. இவர் சம்ஸ்கிருதத்தையும், பாலியையும், கிரீக்கும், லத்தீனும் தம் இளம் வயதிலேயே நன்றாகப் பயின்றிருந்தார். ‘தாவரநூல்’, ‘நில நூல்’ ஆகிய விஞ்ஞானத்துறையில் தாம் செய்த ஆராய்ச்சிக்காக இவர் முனைவர் பட்டம் பெற்றிருந்தார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Karur

Dinamani Karur

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

பந்தன் வங்கி கடனளிப்பு 10% உயர்வு

தனியார் துறை வங்கியான பந்தன் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Karur

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Karur

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Karur

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size