Essayer OR - Gratuit
குடியரசுத் தலைவரின் கேள்விகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
Dinamani Karur
|July 23, 2025
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
-
புது தில்லி, ஜூலை 22:
குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள விவகாரங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்து ஒரு வாரத்துக்குள், அதாவது வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலை சமர்ப்பிக்கமாறு மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
தமிழகம், கேரளம் ஆட்சேபம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த அரசியல் சாசன அமர்வில் வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் பி.வில்சன் மற்றும் கே.கே. வேணுகோபால் ஆகியோர், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். குடியரசுத் தலைவரின் கேள்விகளை விசாரணைக்கு அனுமதித்ததை அவர்கள் கேள்வி எழுப்பினர்.
வில்சன் வாதிடுகையில், 'குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புகளில் விளக்கங்கள் அளித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் மீண்டும் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகள் விசாரணைக்கு உகந்தவையல்ல என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு' என்றார்.
வழக்குரைஞர் ராகேஷ் திவேதி வாதிடுகையில், 'குடியரசுத் தலைவர் தனது கேள்விகளில் குறிப்பிட்டுள்ளதுபோல, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல்களைத் தீர்ப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது பிரிவு எப்படி பொருந்தும்?. எனவே, குடியரசுத் தலைவரின் கேள்வியே தவறானது' என்றார்.
Cette histoire est tirée de l'édition July 23, 2025 de Dinamani Karur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Karur
Dinamani Karur
சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்
சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Karur
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Dinamani Karur
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Karur
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Karur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Karur
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Karur
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Karur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Karur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Karur
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Translate
Change font size
