Facebook Pixel பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி | Dinamani Kanyakumari - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

Dinamani Kanyakumari

|

March 18, 2025

எதிர்ப்பு-154; ஆதரவு-63

சென்னை, மார்ச் 17: தமிழக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவுவை பதவி நீக்கக் கோரும் அதிமுகவின் தீர்மானம் திங்கள்கிழமை தோல்வி அடைந்தது. பேரவையில் தீர்மானத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் 154 பேரும், ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக உறுப்பினர்கள் 53 பேரும் வாக்களித்தனர். அதேசமயம், பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது அவையில் இல்லை.

அதிமுக தீர்மானம்: சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார். பேரவையில் ஒரு உறுப்பினர் முன்மொழிந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க, பேரவை விதி 70 (2)-ன்படி, 35-க்கும் குறையாத உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில், உதயகுமார் முன்மொழிந்த தீர்மானத்துக்கு ஆதரவு இருக்கிறதா என பேரவைத் தலைவர் மு.அப்பாவு கேள்வி எழுப்பினார். அதற்கு, அப்போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் 63 பேர் எழுந்து நின்றனர். தீர்மானத்துக்கு 35-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால், அதிமுகவால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

இருக்கையிலிருந்து இறங்கினார்: பேரவைத் தலைவர் மீதே நம்பிக்கையில்லாத தீர்மானம் அளிக்கப்பட்டதால், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இடம் அப்பாவு ஒப்படைத்தார். இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை துணைத்தலைவர் பிச்சாண்டி ஏற்று அவையை நடத்தத் தொடங்கினார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். இதையடுத்து, தீர்மானத்தின் மீது பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுமதி தரும்படி ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுக்க, அதனை பேரவை துணைத்தலைவர் ஏற்றுக்கொண்டு அனுமதித்தார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Kanyakumari

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான 'ஜிஹாதி போதைப் பொருள்' என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Kanyakumari

படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!

'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size