Essayer OR - Gratuit
ஊடல் கொள்ள நேரமில்லை!
Dinamani Dindigul & Theni
|November 02, 2025
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
உயர்ந்த பண்புகளுடன் விளங்கிய சங்ககால மகளிரின் தலையாய மாண்பு விருந்தினரை ஏற்று உபசரித்தல் என்பதனை,
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள் (தொல்-பொருள் கற்பியல்-11)
எனும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.
சங்க காலத்து மறக்குடி மகளிர் ஒருத்தி தன்குடியின் முன்னோர் புகழ் நிலவுமாறு போரிட்டுக் களத்தில் மாய்ந்து நடுகல் ஆகியதை அறிந்தாள். அவனுடைய நடுகல்லினை நாள்தோறும் வழிபட்டு வந்தாள். அவள் எதை வேண்டி வழிபட்டாள்? யான் நாள்தோறும் விருந்தினர் வரப்பெறுதல் வேண்டும். என் கொழுநன் சிறந்த பகையைப் பெறுதல் வேண்டும் (புறம்-306) என்பன அவள் வேண்டுகோள்.
உணவிற்குக் காத்திருப்போர் எவரேனும் வீட்டுக்கு வெளியில் இருக்கின்றனரா என்று தாம் உண்ணச்செல்லுமுன் பார்த்து, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுப் பின்பு, தாம் உண்ணுதலை வழக்கமாகக் கொண்டிருந்தனர் சங்கத் தமிழ்ப் பெருமக்கள்.
அமிழ்தமே ஆயினும் விருந்தினரை நீக்கித் தனித்து உண்ணாதவர் தமிழகத்தில் இருந்தனர் என்பதனை,
இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே (புறம்-182)
என்கிறது புறநானூறு. ஔவையாரும் 'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' என்கிறார்.
விருந்தினர் வரவில்லை என்றால் அதற்கென வருந்தி, விருந்தினரைத் தேடித் தேரில் அழைத்து வந்து உண்பித்த அரசரும் அக்காலத்தில் இருந்தனர்.
Cette histoire est tirée de l'édition November 02, 2025 de Dinamani Dindigul & Theni.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
முகமதன் எஸ்சி-யை அபார வெற்றி கண்டது மும்பை சிட்டி எஃப்சி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 4-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Dindigul & Theni
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Dindigul & Theni
சென்னை மியூசிக் அகாதெமியில் கர்நாடக இசை படிப்பு ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மியூசிக் அகாதெமி சார்பில் நடத்தப்படும் கர்நாடக இசை குறித்த 3 ஆண்டு பட்டயப் படிப்புக்கு ஜூன் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
1 min
May 16, 2026
Listen
Translate
Change font size
