Essayer OR - Gratuit
கவிஞர் புவியரசு (94) காலமானார்
Dinamani Dharmapuri
|July 01, 2026
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள லிங்கவநாயக்கன்புதூரில் சுப்பையா-தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 19.9.1931-இல் பிறந்தார். இவரது இயற்பெயர் சு. ஜெகந்நாதன். சம்ஸ்கிருதத்தில் இருந்த தனது பெயரை புவியரசு என்று தமிழ்ப்படுத்திக்கொண்டார். கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் பட்டமும், பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டமும் பெற்ற இவர், சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சியும், தில்லியில் காந்தியவியலில் மருத்துவப் பட்டயமும் பெற்றவர்.
தமிழ் மட்டுமன்றி மலையாளம், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். கோவை சுதந்திரா உயர்நிலைப் பள்ளி, தியாகி என்.ஜி.ஆர். உயர்நிலைப் பள்ளி, சர்வ ஜனா உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீ சே. ப. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப் பள்ளிகளில் 1957-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
முதுமை காரணமாக பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த புவியரசு செவ்வாய்க்கிழமை காலை காலமானார். இவரது இறுதிச்சடங்குகள் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கவிஞர் புவியரசின் மனைவி ஜெகதா சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு மலர்விழி, பாக்கியலட்சுமி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
Cette histoire est tirée de l'édition July 01, 2026 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Dharmapuri
சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை
தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.
1 min
July 01, 2026
Dinamani Dharmapuri
அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி
நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Dharmapuri
ஜப்பான் பிரதமர் தகாஷி இன்று இந்தியா வருகை
ஜப்பான் பிரதமர் சனே தகாஷி இந்தியாவில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
1 min
July 01, 2026
Dinamani Dharmapuri
ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்
1 mins
July 01, 2026
Dinamani Dharmapuri
காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.
1 min
July 01, 2026
Dinamani Dharmapuri
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Dharmapuri
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
1 min
July 01, 2026
Dinamani Dharmapuri
புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்
அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
1 min
July 01, 2026
Dinamani Dharmapuri
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Listen
Translate
Change font size
