Essayer OR - Gratuit
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
Dinamani Dharmapuri
|October 14, 2025
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
இது ஒருபுறமிருக்க, நகரங்களில் பொது மக்களிடம் பணத்தைக் கேட்டுப் பெறும் திருநங்கைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது.
கடைகளில் மட்டுமல்லாது, பேருந்துகளிலும், ரயில்களிலும் அவர்கள் கூட்டமாக வந்து பணம் கேட்கிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் அவர்களில் சிலர் நடந்துகொள்ளும் விதம் ஏற்புடையதாக இல்லை.
பெருநகரங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகனங்களை திருநங்கைகள் முற்றுகையிட்டு பணம் கேட்டு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவின்படி, வேலைவாய்ப்பில் சம உரிமை, பேச்சுரிமை, வாழ்க்கை உரிமை ஆகியவற்றின் கீழ் அனைத்து திருநங்கைகளும் அடிப்படை உரிமைகளுக்கு உரிமை உடையவர்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், இந்தியாவில் அதிகாரபூர்வ பாலினமாக திருநங்கையை 2020-ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
திருநங்கைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், 2008-இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர், அரவாணிகள் என்ற பெயரை திருநங்கைகள் என மாற்றி அறிவித்தார். இதையடுத்து, திருநங்கைகள் நல வாரியம் என்று அழைக்கப்படுகிறது.
Cette histoire est tirée de l'édition October 14, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்
முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 mins
January 06, 2026
Dinamani Dharmapuri
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Dharmapuri
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Translate
Change font size
