Essayer OR - Gratuit

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

Dinamani Dharmapuri

|

June 20, 2025

பொதுவாகவே தவறான தகவல்கள், போலிச் செய்திகள் வேகமாகப் பரவும் தன்மையுடையவை. சமூக ஊடகங்கள் இந்தச் சூழலை இன்னும் இரட்டிப்பாக்குகின்றன. அசலைக் காட்டிலும் போலிக்கு வலிமை அதிகம். இப்படிப்பட்ட தவறான தகவல்கள் மனதில் இனம்புரியாத ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

அண்மையில் குடும்பத்தினருடன் வெளிமாவட்டத்துக்கு சென்றபோது இணைய இடர்ப்பாடு ஏற்பட்டு 'கூகுள் மேப்' கைவிட்ட நிலையில், வாகனத்தை நிறுத்தி வழி கேட்டோம். ஒரு நபர் நம்பிக்கையுடன் நம்மிடம் பேசி, தீர்மானமாக ஒரு திசையை சுட்டி வழி காட்டினார். அவர் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தபோது மாற்றுப் பாதையில் வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அதன்பிறகு, மற்றொரு நபரிடம் வழிகேட்டோம். முதல் நபர் சொன்ன பாதைக்கு நேர்மாறான எதிர்பாதையில் செல்லுமாறு அவர் வழிகாட்டினார். முதல் நபர் அத்தனை தீர்மானமாகச் சொன்னாரே, தற்போது யார் காட்டிய திசையில் செல்வது என்று உள்ளுக்குள் பெரும் குழப்பம். மூன்றாவது நபர் ஒருவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று அவரிடம் விசாரித்ததில் இரண்டாம் நபர் சொன்ன பாதையை அவர் வழிமொழிந்து அந்தப் பாதையை தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

முதல் நபர் தவறாக வழிகாட்டியதால் நேரம் வீணாகிவிட்டதே என்று கவலை கொண்டாலும் தனக்கு நூறு சதவீதம் உறுதியாக தெரியாத ஒரு தகவலை, அவர் ஏன் அத்தனை தீர்மானமாக இருந்து வழி சொன்னார் என்ற கேள்வி நீண்ட நேரம் மனதைக் குடைந்தது.

ஒரு தவறான தகவல் எத்தனை வகையான அசௌகர்யங்களை ஏற்படுத்திவிடுகின்றன! ஒரு மனிதர் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவர் பகிர்ந்தவை உண்மையாகத்தான் இருக்கும் என்று நம் மனம் நம்பியதே பொய்த்துப் போகும் சூழ்நிலையில், யார் சொன்னது, எவர் சொன்னது என்று சிறிதளவும் தெரியாத ஒரு தகவலை எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் பலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வலிமையாகத் தோன்றியது.

சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் பெரும் பங்கு வகித்துவிட்ட இந்த நவீன யுகத்தில், நம்மைத் தொடர்புகொள்ள, தகவல்களைப் பகிர, செய்திகளைத் தெரிந்து கொள்ள எனப் பல்வேறு தேவைகளை அவை பூர்த்திசெய்கின்றன; எனினும், ஏராளமான தவறான தகவல்களும் கட்டுக்கதை களான செய்திகளும் வலம்வருகின்றன. சுமார் 70 சதவீதம் அளவுக்கு தவறான தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தங்களுக்கு வந்துசேரும் ஒரு தகவல் உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் தொடர்ந்து பகிர்கின்றனர். அதனால் சில நேரங்களில் நம் மீது இருக்கும் நம்பகத்தன்மைகூட கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. நாம் இப்படி பொதுவெளியில் பகிரும் நம்பகமற்ற தகவல்களினால் மறைமுகமாக சில பிரச்னைகள் முளைகின்றன என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்?

PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

6 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 4) 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

உள்ளூர் மொழியறிதல் அவசியம்!

அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.

time to read

2 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Translate

Share

-
+

Change font size