Essayer OR - Gratuit
திவ்வியப் பிரபந்த உரைகளில் திருக்குறள்
Dinamani Coimbatore
|August 17, 2025
கை நூல்களைக் காட்டிலும் திருக்குறள் ஆட்சியே திவ்வியப் பிரபந்த உரைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழறிந்த எல்லாப் பிரிவினரையும் ஈர்த்தது போலவே வைணவ உரையாசிரியர்கள் மனத்தையும் திருக்குறள் ஈர்த்ததற்கான சான்றுகள் பலப்பல.
தான் கருதிய பொருளுக்குச் சான்றாதாரமாகக் குறளை முழுமையாகக் காட்டுதல், முதற்குறிப்பை மட்டும் சுருங்கச் சுட்டிக் குறள் முழுமையும் நினைவுக்குவரச் செய்து கருத்து விளக்கம் தருதல், கருத்து வாங்கி எழுதுதல், இவ்வாறு எழுதுகிற உரைப் போக்கால் இன்ன குறளை நினைந்து எழுதிய விளக்கம் என்று ஊகிக்கவைத்தல், அந்நாளில் குறளுக்கு வழங்கிய பாடப் பேதங்களைக் காட்டுதல், குறளுக்கு அந்வயம் (கொண்டு கூட்டி) காட்டி மணிப்பிரவாள நடையில் பொருள் கூறுதல், காமத்துப் பால் குறளாயின் தலைவன், தலைவி, தோழி இருவள், அது யார் கூற்று என விளக்குதல் எனப் பல நிலைகளில் திருக்குறள் இவ்வுரைகளில் இடம் பெற்றுள்ளது; எடுத்தாளப்பட்டுள்ளது.
கண்ணனின் பிள்ளைமைக் குறும்புகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பலை ஒரு திருமொழியிற் பாடுவார் குலசேகராழ்வார். அப்பதிகம் முழுவதும் 'சேய்வளர் காட்சியின் சீர்மையை, பெற்ற தாயான தேவகி கண்டு களிக்காத' அவலமே பேசப்பெறும்.
அதில், தண்ணந் தாமரைக் கண்ணனே! கண்ணா (713) எனத் தொடங்கும் ஒரு பாசுரத்தில், தெருவில் நீ புழுதி யாடி வந்து என் மார்பில் பொருந்திடப் பெற்றிலேன்; வண்ணச் செஞ் சிறு விரல்களால் நீ வாரியுண்ட அடிசிலின் மிச்சிலை உண்ணவும் பெற்றிலேன்; ஓ! கொடுவினையேன் என வருந்துகிறாள் ஈன்ற தாயான தேவகி.
இப்பாசுர விளக்கத்தில், அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (64) மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்று அவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு (65) என்னும் குறட்பாக்களைக் காட்டுகிறார் பெரியவாச்சான் பிள்ளை.
இவற்றில் முறையே 'அமுதினும்' (64), 'மற்றவர் தம்' (65) என்பன அவர் கொண்ட பாடமாகவுள்ளன.
Cette histoire est tirée de l'édition August 17, 2025 de Dinamani Coimbatore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Coimbatore
கோவையில் செம்மொழி தமிழ் மன்றம்
செம்மொழி தமிழமன்றம் கோவை
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Coimbatore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 mins
September 01, 2025
Dinamani Coimbatore
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Translate
Change font size