Essayer OR - Gratuit
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
DINACHEITHI - NAGAI
|May 21, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
-
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில "தமிழ்ப்புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, இராணி மேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம் இராணி மேரி கல்லூரியில் 22.11.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இராணி மேரி கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக விடுதி ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை உடனே ஏற்றுக் கொண்டு விழா மேடையிலேயே விடுதி கட்டித் தரப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
Cette histoire est tirée de l'édition May 21, 2025 de DINACHEITHI - NAGAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - NAGAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - NAGAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - NAGAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - NAGAI
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக அமைச்சரவை கூட்டம்
ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
1 min
January 07, 2026
DINACHEITHI - NAGAI
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
DINACHEITHI - NAGAI
சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - NAGAI
வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - NAGAI
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்
தேர்தல் ஆணையம் தகவல்
1 mins
January 06, 2026
Translate
Change font size
