Essayer OR - Gratuit
பரிகாரம்
Kungumam
|25-07-2025
திருவொற்றியூர் கடற்கரையில் ஓயாமல் துரத்தும் அலைகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் கலாவதி.
அருகே கணவர் நடேசன் ஒரு நாவலில் மூழ்கியிருந்தார். அவள் நாலாபக்கமும் சுற்றிப் பார்த்தாள். பாறைகளால் உருவாக்கப்பட்ட மேடான பாதையில் சிலர் சமுத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மறுபக்கம் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக நிறுவப்பட்டிருந்த 'கான்க்ரீட்' தூண்கள் பிரம்மாண்டமான சதுரங்க யானைகளைப் போலக் காட்சியளித்தன.
வலது பக்கம் தொலைதூரத்தில் துறைமுகத்து பளுதூக்கிகள் தென்பட்டன. வங்காள விரிகுடாவில் படகு தள்ளாடிக் கொண்டிருந்தது.
“என்ன... ஒண்ணும் பேசமாட்டேங்கறே..." என்றார் நடேசன், புத்தகத்தை மூடியவாறே.
"நம்ம பொண்ணைப் பத்தின கவலைதாங்க. முப்பது வயசாயிடுச்சி. எப்பதான் கல்யாணம் ஆகுமோ தெரியலை... நாம பதிஞ்சு வெச்ச மேட்ரிமோனியில இருந்து நிறைய வரன் வந்தது. எதுவுமே அமையலை...”
“ஜோஸ்யர் குருபலன் வந்திடுச்சின்னு சொல்லிட்டாரே கலா... இந்த வருஷத்துக்குள்ள நடந்துடும்..."
"நிறைய பேர்கிட்ட அவளோட ஜாதகத்தை காண்பிச்சாச்சு. ஸ்திரீ சாபம்... நாக தோஷம்... அது இதுன்னு ஒவ்வொருத்தரும் விதவிதமா சொல்றாங்க..."
“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கையில்ல. நீதான் அவங்க சொல்ற பரிகாரம் எல்லாத்தையும் ஒண்ணு விடாம பண்றியே..."
"தண்டையார்பேட்டையில ஒரு தேவி உபாசகர் இருக்கார். அவர் வாக்கு அப்படியே பலிக்குதாம். கடைசியா ஒரு தடவை அங்கேயும் பார்த்துடலாங்க..."
“இப்படிதான் போன வருஷம் மைசூர் பக்கத்துல தலக்காடு கூட்டிட்டு போக சொன்ன... அஞ்சு சிவன் கோவில்ல அபிஷேகம் செஞ்சு காவிரி தண்ணியை எடுத்துட்டு வந்தோம். வீட்டுல அய்யருங்களை வரவழைச்சு மந்திரம் ஓதி, ஏழு சுமங்கலிக்கு சாப்பாடு போட்டு சேலை, பணம் எல்லாம் குடுத்தே..."
“அது 'கர்ம பிராயச்சித்தம்'ங்க. மாம்பலத்துல ஒருத்தர்கிட்ட பிரஷ்னம் கேட்க போனோமே... அவர் சொன்னது..." என்றாள் கலாவதி.
“அப்பறம்... வாராவாரம் கோயிலுக்குப் போயி துர்க்கைக்கு எட்டு எலுமிச்சம் பழ மூடியில பசும் நெய் விட்டு தீபம் ஏத்திட்டு வந்தே...”
"கோயம்பேடுல ஆரூடம் பார்த்த ஒரு மாமி சொன்ன பரிகாரம் அது...”
"வெள்ளிக்கிழமை அன்னிக்கு வரளி மஞ்சளை பத்மாவதி தாயார் படத்துக்கு முன்னாடி வெச்சு ஒரு மண்டலம்...” என்று ஆரம்பித்தவரை பாதியில் நிறுத்தினாள் கலாவதி.
“எல்லாமே நம்ம சபிதாவுக்கு நல்ல எடத்துல கல்யாணம் ஆகணும்கறதுக்காக செஞ்சது. சும்மா சொல்லிக் காட்டாதீங்க...”
Cette histoire est tirée de l'édition 25-07-2025 de Kungumam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
