தெய்வத் திருமகள்!
Kungumam|07-07-2023
கேரளாவில் உள்ள திருச்சூரில் வசித்து வரும் ஓர் அழகான குடும்பத்துக்குச் சொந்தக்காரர், பிரதீஷ்
த.சக்திவேல்
தெய்வத் திருமகள்!

அவருக்கு தன்யா என்ற மனைவியும், தேவானந்தா என்ற மகளும், அதிநாத் என்ற மகனும் உள்ளனர். உள்ளூரிலேயே ஒரு கடையைக் குத்தகைக்கு எடுத்து, இன்டர்நெட் மையத்தை நடத்தி வந்தார் பிரதீஷ். 

கடந்த அக்டோபர் வரையிலும் மகிழ்ச்சியாலும், அமைதியாலும் நிரம்பியிருந்தது அவரது குடும்பம். வெளிச்சம் மட்டுமே ஊடுருவியிருந்த பிரதீஷின் வீட்டுக்குள் மெல்ல, மெல்ல இருள் கசியத் தொடங்கியது.

அடுத்த சில நாட்களில் நிலைகுலைந்துபோனது பிரதீஷின் குடும்பம்.

ஆம்; அக்டோபர் மாதத்தின் ஒரு நாள். இரவு தூக்கத்திலிருந்து காலையில் எழுந்தார் பிரதீஷ். அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. பேச முயன்றும் வார்த்தைகள் வெளிவரத் திணறியது.

எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர் அவர். அன்று நாள் முழுவதும் சோர்வாக இருந்தார். முன்பு போல எந்த வேலையையும் அவரால் செய்ய இயலவில்லை. சில நேரங்களில் அவரது உணர்வுநிலைகூட சரியாக இயங்கவில்லை. மட்டுமல்ல, இரண்டு கால்களும் வீக்கமடைந்தன. எழுந்து நடக்கவே கடினப்பட்டார்.

தனது உடலுக்கு என்ன நேர்ந்தது என்று அவராலும், குடும்பத்தினராலும் யூகிக்கக்கூட முடியவில்லை. இத்தனைக்கும் அவரது வயது 48தான். மதுப்பழக்கம் இல்லாதவர்.

உடனடியாக கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனைக்கு விரைந்தது அவரது குடும்பம். ராமச்சந்திரன் நாராயணமேனன் என்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரின் தலைமையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலில் துரித நேரத்தில் பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவருக்குக் கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மட்டுமல்ல, கல்லீரலைச் சுற்றி கொழுப்பு வேறு படிந்திருந்தது. பிரதீஷின் வருமானத்தையும், ஆதரவையும், இருப்பையும் நம்பியிருந்த குடும்பம் முழுவதுமாக இருளில் மூழ்கியது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே பிரதீஷின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. அதையும் விரைவில் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் மட்டுமே பிரதீஷால் உயிருடன் இருக்க முடியும்.

பிரதீஷின் குடும்பம் இருளிலிருந்து வெளிச்சத்துக்குத் திரும்ப வேண்டுமானால், அவர்கள் இரண்டு போராட்டங்களை வெற்றிகொள்ள வேண்டும்.

முதலாவது, பிரதீஷுக்குப் பொருத்தமான கல்லீரலை தானமாகக் கொடுக்க முன்வருபவரைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் ஒரு சில நாட்களில்.

Esta historia es de la edición 07-07-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición 07-07-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
2024 உலகக் காப்பை
Kungumam

2024 உலகக் காப்பை

ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கவுள்ள ஐசிசியின் ஆண்களுக்கான ஒன்பதாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து நடத்துகின்றன.

time-read
1 min  |
07-06-2024
+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!
Kungumam

+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!

இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

time-read
2 minutos  |
07-06-2024
இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!
Kungumam

இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி யனாக பேர் வாங்கிய சூரி, ‘விடுதலை’யில் ஹீரோவாக அடுத்த வெர்ஷனுக்கு மாறி வெற்றிக்கொடி பறக்கவிட்டார்.

time-read
3 minutos  |
07-06-2024
நாசியின் விளையாட்டுத் திடல்!
Kungumam

நாசியின் விளையாட்டுத் திடல்!

பொதுவாக வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாசனைத் திரவியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு அந்த வாசனைத் திரவியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குடுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

time-read
3 minutos  |
07-06-2024
டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!
Kungumam

டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!

சினிமா விமர்சகர், அரசியல் பத்திரிகையாளர், காவல் அதிகாரி, இன்வெஸ்டிகேஷன் ஆபீசர், விளம்பரப் பட இயக்குநர்...

time-read
2 minutos  |
07-06-2024
ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Kungumam

ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

1979ம் ஆண்டில் ஈரானிய மக்கள் அங்கே ஒரு சம்பவம் செய்தார்கள்.

time-read
1 min  |
07-06-2024
ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!
Kungumam

ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!

இருப்பதிலேயே மிகப்பெரும் சவாலான ஒன்று குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கொண்டு ஒரு கதை சொல்லி படமெடுப்பதுதான்.

time-read
2 minutos  |
07-06-2024
ஆதிக்க பசி
Kungumam

ஆதிக்க பசி

இன்னும் கொஞ்சம் அகலமாக சிரித்திருக்க வேண்டும்.

time-read
3 minutos  |
07-06-2024
தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!
Kungumam

தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!

உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையாகும் வெப்ப மண்டல பழங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பழம், அவகேடோ.

time-read
2 minutos  |
07-06-2024
மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!
Kungumam

மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!

சிறப்புக் குழந்தைகள் என்றாலே துறுதுறுவென ஆர்ப்பாட்டம் செய்துகொண்டும், கூச்சலிட்டபடியும் இருப்பார்கள் என்ற நினைப்பே நம்மில் பலருக்கும் இருக்கும்.

time-read
2 minutos  |
07-06-2024