Versuchen GOLD - Frei

இந்தியா முன்னேற இந்தி எதிர்ப்பு அவசியம்!

Kanmani

|

March 05, 2025

மொழி என்பது அறிவை முகப்பதற்கான கரண்டி. அது இலக்கண, இலக்கிய செழுமை நிறைந்ததாக இருந்தால் அதைப்பேசும் மக்கள் அறிவும், திறமையும் வளரும்.

- பரிதிபாலன்

இந்தியா முன்னேற இந்தி எதிர்ப்பு அவசியம்!

காலத்துக்கும் நிலைத்திருப்பது மட்டுமல்ல, காலத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளவும் அம்மொழிக்கு தகுதி இருக்க வேண்டும்.

இந்திய மண்ணில் தமிழ் போன்ற சில மொழிக்குத்தான் அந்த தன்மை இருக்கிறது. ஆனால், அம்மொழிகளையும் அழிக்கும் வகையில் இந்தி திணிப்பை புதிய கல்விக்கொள்கை மூலம் இந்திய அரசு மேற்கொள்கிறது.

விருப்பத்தேர்வாய் இந்தியை முன்மொழிந்த காலம் போய், இப்போது கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தள்ளுகிறது.

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காதது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ.2,152 கோடி அல்ல... 5000 கோடியை தமிழ்நாடு இழக்கும். மும்மொழியை ஏன் அமுல்படுத்தவில்லை' என்று ஆணவத் தொனியில் பதிலளித்துள்ளார்.

அதாவது இந்தியை ஏன் தமிழ் நாட்டில் கட்டாயமாக கற்பிக்கவில்லை என்பதுதான் அதன் உள்ளார்ந்த மிரட்டல்.

imageஅவரது இந்தப் பேச்சுக்கு பல தலைவர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் இந்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், 'மாநில அரசின் மொழிக் கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா? நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

முதலில் எந்த மொழியை எதற்காக கற்க வேண்டும் என்ற அறிவார்ந்த யோசனை வேண்டும்.

அது இல்லாமல் இந்தியை படித்தால் வேலை கிடைக்கும் என்ற கானல்நீரை கைக்காட்டுவது ஒன்றிய அரசின் வழக்கமான புலம்பலாக உள்ளது.

வட இந்தியாவில் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள், இந்தி படித்தவர்கள் கால்வாசி பேருக்க ாவது வேலை கிடைத்துள்ளதா? என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டால்... நிச்சயம் பதில் வரப்போவதில்லை.

WEITERE GESCHICHTEN VON Kanmani

Kanmani

அம்மா ஒரு துளசிச் செடி!

புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது

time to read

1 min

December 17, 2025

Kanmani

Kanmani

நேர்மறை உளவியலின் தூண்கள்!!

நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.

time to read

1 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!

ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.

time to read

1 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!

செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!

சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.

time to read

2 mins

December 17, 2025

Kanmani

Kanmani

தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

அங்கம்மாள்

பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.

time to read

2 mins

December 17, 2025

Kanmani

சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்

உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

time to read

1 min

December 17, 2025

Translate

Share

-
+

Change font size