Versuchen GOLD - Frei
உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் கூறும் செய்தி
Virakesari Weekly
|May 11, 2025
எதிர்பார்க்கப்பட்டதை போன்று வாக்களிப்பதில் மக்களின் ஆர்வமும் கணிசமானளவுக்கு குறைந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் 79.46 சதவீதமாகவும் பாராளுமன்ற தேர்தலில் 68.93 சதவீதமாகவும் இருந்த வாக்களிப்பு, உள்ளூராட்சி தேர்தல்களில் 55 சதவீதத்துக்கும் 60 சதவீதத்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்தது.
-
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளையும் விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான வாக்குகளை ஆளும் கட்சி பெற்றிருக்கின்ற போதிலும், எதிரணிக் கட்சிகளின் வாக்குகளில் ஒரு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் 17.66 சதவீதமான வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி, இந்த தடவை 21.69 சதவீதமான வாக்குகளுடன் 14 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் வெறுமனே 3.14 சதவீதமான வாக்குகளைப் பெற்ற ராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மொத்த வாக்குகளில் 9.17 சதவீதமான வாக்குகளை பெற்றிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட அதன் வாக்குகளில் ஏற்பட்ட சொற்ப அதிகரிப்பு குறித்து ஒருவித திருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சி சபைகளில் வெற்றியைப் பெற்றிருக்கின்ற போதிலும், 120 சபைகளில் பெரும்பான்மை உறுப்புரிமையைக் கொண்டிருக்கவில்லை. 116 சபைகளிலேயே எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்களினால் நிருவாகத்தை அமைக்கக் கூடியதாக அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருக்கின்ற அதேவேளை, 30 சபைகளில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சமமானதாக இருக்கிறது. 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் ஆளும் கட்சியினால் 48 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றக் கூடியதாக இருந்தது.
உள்ளூராட்சி தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்காக தேசிய மக்கள் சக்தி அதன் அதிகாரத்துக்கு உட்பட்ட சகலதையும் செய்தது. ஜனாதிபதி திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு பூராகவும் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டார்கள். எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கு நிதியை ஒதுக்குவது தொடர்பில் ஜனாதிபதி ஓர் எச்சரிக்கையையும் கூட மறைமுகமாக விடுத்தார்.
Diese Geschichte stammt aus der May 11, 2025-Ausgabe von Virakesari Weekly.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Weekly
Virakesari Weekly
மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு
வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு
1 min
August 24, 2025
Virakesari Weekly
ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
1 min
August 24, 2025
Virakesari Weekly
மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்
பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.
1 min
June 29, 2025
Virakesari Weekly
ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்
இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அடுத்த கட்ட சாணக்கியம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.
3 mins
June 29, 2025
Virakesari Weekly
ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்
நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
சிக்கிக் கொண்ட கடற்படை
இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.
2 mins
June 29, 2025
Virakesari Weekly
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்
இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி
பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.
1 min
June 29, 2025
Translate
Change font size
