Versuchen GOLD - Frei
வடக்கிலும் தெற்கிலும் நினைவு கூரல்களில் சிக்கிக்கொண்ட அரசாங்கம்
Tamil Mirror
|May 28, 2025
அரசாங்கம் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவு கூர்ந்தும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நடத்தியும் ஒரு வாரத்துக்கு மேலாகிய போதிலும் அவற்றோடு எழுந்த சில சர்ச்சைகளில் அரசாங்கம் இன்னமும் சிக்கியிருக்கிறது.
இன்னமும் சிங்கள தேசியவாத சக்திகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசாங்கத்தை மிக மோகமாகத் தாக்கி வருகின்றன. அரசாங்கம் அவ்விமர்சனங்களை அவ்வளவாகப் பொருட்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளா விட்டாலும், உண்மையிலேயே அரச தலைவர்கள் அவற்றுக்குப் பதிலளிக்கத் தயங்குவதாகவே தெரிகிறது.
போரில் உயிரிழந்த போர் வீரர்களை நினைவு கூர்வதற்காக இவ்வருடம் மே 19ஆம் திகதி அரசாங்கம் நடத்திய நிகழ்ச்சி பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறும் என்று அரசாங்கம் முதலில் அறிவித்ததையடுத்தே முதலாவது சர்ச்சை உருவாகியது. இந்த அறிவித்தலின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதில் கலந்து கொள்வதில்லை என்றே தெரிந்தது.
இதனை எதிர்க்கட்சிகளும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி முப்படைகளின் பிரதம கட்டளை அதிகாரியாவார். போரில் உயிர் நீத்த போர் வீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் முப்படைகளின் பிரதம கட்டளை அதிகாரி கலந்த கொள்ளாவிட்டால் அதற்கான காரணத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று பலர் வாதிட்டனர்.
அதேவேளை, இலங்கையின் இராணுவ தர வரிசை பிரகாரம் இராணுவ நிகழ்ச்சியொன்றில் பீல்ட் மார்ஷல் ஒருவருக்கு மேல் முப்படைகளின் பிரதம கட்டளை அதிகாரியான ஜனாதிபதி மட்டுமே இருக்க முடியும் என்றும் எனவே, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவ்வாறான நிகழ்ச்சியொன்றுக்குத் தலைமை தாங்க முடியாது என்றும் சிலர் சுட்டிக் காட்டினர். ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் நெருக்குதல் காரணமென்றும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த தமிழர்கள் காரணமென்றும் பலர் அவரவர் விரும்பியவாறு வரைவிலக்கணம் செய்தனர். ஜனாதிபதி தமிழர்களுக்கு அடிபணிந்து செயற்படுகிறார் என்பதே அவர்களது வாதமாகியது.
இவற்றுக்குப் பதிலளிக்காமலிருந்த அரசங்கம் நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று கடந்த 18ஆம் திகதி அறிவித்தது. ஜனாதிபதியும் அதில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உல்லாசப் பிரயாணத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் இந்த குழப்பமான நிலைமையைப் பற்றிக் கேட்கப்பட்டது.
Diese Geschichte stammt aus der May 28, 2025-Ausgabe von Tamil Mirror.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
