Versuchen GOLD - Frei

தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே முக்கிய காரணம்

Maalai Express

|

October 15, 2025

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்

தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே முக்கிய காரணம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அரசின் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன். கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டனர். காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.

அதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தனர். கட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது. கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனம் திருக்காம்புலியூர் ரவுண்டானாவை அடைந்து கோயம்புத்தூர் சாலையை நோக்கி வலது பக்கத்தில் தவறான பாதையில் சென்றது.

அப்போது காவல் துறையின் அறிவிப்பை மீறி கேரவன் வாகனம் முனியப்பன் கோவில் அருகில் தவறான திசையில் வலதுபுறம் கடந்தது. அந்த வாகனத்தைத் தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும், கட்சியினரும் கேரவன் வாகனத்தை பின்தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கடந்த செப்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

Maalai Express

19-ந்தேதி தீர்வு காணாவிட்டால் அரசு டாக்டர்கள் 20-ந்தேதி போராட்டத்தில் குதிக்க முடிவு

அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

January 07, 2026

Maalai Express

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

time to read

1 min

January 06, 2026

Maalai Express

Maalai Express

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

time to read

1 min

January 06, 2026

Maalai Express

Maalai Express

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20ந்தேதி தொடங்குகிறது.

time to read

1 min

January 06, 2026

Maalai Express

தங்கம், வெள்ளி விலை உயர்வு

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 2 முறை மாற்றம் கண்டது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

Maalai Express

கவர்னர் தேநீர் விருந்து : தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பு

நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் படி கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

Maalai Express

அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் பணிக்கொடை

புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

time to read

1 min

January 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size