Facebook Pixel விண்வெளி ஆய்வில் இந்தியா! | Dinamani Villupuram – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

விண்வெளி ஆய்வில் இந்தியா!

Dinamani Villupuram

|

August 23, 2025

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய இடம் இனிமேல் 'சிவசக்தி முனை' என்றழைக்கப்படும்; சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

- இளங்கோ கட்டிமுத்து

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று, சந்திரயான்-3 விக்ரம் தரை இறங்கு வாகனம் (லேண்டர்), பிரக்யான் நிலவு ஊர்தி (ரோவர்) அகியவற்றை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என இந்தியா பெயர் பெற்றது. இந்த சாதனையை அங்கீகரித்த பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவு கூரும் வகையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதியை இந்தியாவின் தேசிய விண்வெளி தினம் என்று அறிவித்தார்.

இந்த நாள், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில் செய்ய ஊக்குவிக்கும் ஒரு தளமாகவும், விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் பெருமையை விண்ணில் நிலைநாட்டிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் இரண்டாவது தேசிய விண்வெளி தினம் 23.08.2025 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

டாக்டர் விக்ரம் சாராபாயின் தலைமையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை 23.02.1962 அன்று அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு நிறுவியதில் இருந்து இந்தியாவின் விண்வெளிப் பயணம் தொடங்கியது. இது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, தேசிய வளர்ச்சிக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக பெயர் மாற்றம் பெற்றது.

1963-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள தும்பாவில் இருந்து அமெரிக்காவின் நைக் அப்பாச்சி சோதனை ராக்கெட்டை ஏவியது இஸ்ரோ. அந்த கிராமம் தும்பா பூமத்திய ரேகை சமச்சீர் ராக்கெட் ஏவுதளம் என்று அழைக்கப்படும் தொடக்கம் பெற்றது. பின்னர், விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையமாக மாற்றம் பெற்றது.

செயற்கைக்கோள் வழிகாட்டுதல் தொலைக்காட்சி சோதனையைப் பயன்படுத்தி 1.08.1975 அன்று தன் செயல்பாட்டைத் தொடங்கியது. இது உலகிலேயே முதல் முறையாக செயல்பட்ட வெற்றிகரமான இந்தியாவின் சோதனை மற்றும் சாதனையாகும்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Villupuram

Dinamani Villupuram

Dinamani Villupuram

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

நீத்தார் - பெரியார் - நல்லோர்

திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size