Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

புலமை கனிந்த போற்றிப் பாடல்

Dinamani Vellore

|

November 30, 2025

பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தம் புலமைத் திறத்தால் ஆண்டவர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவ ருக்குச் சைவமும் தமிழுமே மூச்சு. மறைவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்புவரை கவிதை பாடிய வர். எந்தக் கருத்தை அறிந்தாலும் அதை மேலும் அழகுபடுத்திப் பாடுவது அவருக்கு இயல்பு. நலி வுற்றுப் படுக்கையில் கிடந்த அவரைக் காண வந்த கஞ்சனூர் அக்கினிலிங்க சாஸ்திரி, சிவா னந்த லகரியில் உள்ள 'ஸதா மோஹ அடவ்யாம்' என்னும் பாடலை விளக்கினார்.

- முனைவர் தெ. ஞானசுந்தரம்

“சிவனே! எங்கும் நிறைந்தவனே! தலைஓடு ஏந்திப் பிச்சைக்குச் செல்பவனே! என் மனம் என்னும் குரங்கு எப்போதும் மோகம் என்னும் காட்டில் திரிகிறது. பெண்களின் மார்பகமாகிய மலைகளில் கூத்திடுகிறது. ஆசை என்னும் கிளை களில் கண்டபடி சுற்றுகிறது. அதை அன்பென் னும் கயிற்றால் கட்டி உன் வசம் ஆக்கிக்கொள்” என்பது அப்பாடலின் கருத்து. அதைக் கேட்டு மகிழ்ந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உடனே அந் தப் பாட்டின் இறுதிப் பகுதியை, தில்லையில் ஆடும் பெருமானே! மனக் குரங்கினைப் பக்தி என்னும் கயிற்றால் கட்டி அதையும் உன்னோடு சேர்த்துக்கொண்டு பிச்சைக்குச் செல்க” என்று சிறிது மாற்றி மெருகூட்டி,

மோகமாம் அடவி திரிந்து அரி வையர்தம் முலைக்குவட்டிடைநடம் ஆடித் தாகமார் ஆசைத் தருக்குலம் தோறும் தாவுமென் புன்மனக் குரங்கைப் பாகமார் பத்தி நாண்கொடு கட்டிப் பலிக்குநீ செல்கயான் கொடுத்தேன் ஏகநாயகனே! தில்லையில் ஆடும் இறைவனே! எம்பெரு மானே.

என்று பாடினார். இத்தகைய பிள்ளையவர் கள் சேக்கிழாரிடத்தும் சிவஞான முனிவரிடத் தும் ஈடுபாடு கொண்டவர். இதற்குச் சான்று, உறையூர்ப் புராணத்தில் திருநாவுக்கரசர் மீது அவர் பாடியுள்ள போற்றிப் பாடல்.

சேக்கிழார் பெரிய புராணத்தில் நான்கு இடங்களில் திருநாவுக்கரசரின் தோற்றப் பொலிவைப் பாடியுள்ளார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

Dinamani Vellore

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Vellore

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக் கிழமை காலை விநாடிக்கு 4,920 கன அடியாகக் குறைந்தது. எனினும், நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Vellore

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா: கோலி அசத்தல் சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி தனது 49-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

கோவையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட உ.பி. கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு

கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை திருடிய வழக்கில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size