Versuchen GOLD - Frei
மும்பையின் நிழல் உலக தாதாக்களை ஒடுக்கிய தமிழர்
Dinamani Vellore
|October 19, 2025
துனுஷ்கோடி சிவானந்தம். மும்பை மாநகர போலீஸ் கமிஷனராகவும், மகாராஷ்டிர மாநில காவல்துறையின் தலைவராகவும் பணியாற்றிய தமிழர். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமான காவல்துறைப் பணியில் இவர் சந்தித்த சவால்கள், புரிந்த சாதனைகள் பல. இவரது பாராட்டுதலுக்குரிய பணிகளுக்காக ஜனாதிபதியின் பதக்கம் பெற்றவர். இந்தியாவின் உள்நாட்டு, அயல்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
இவரது காக்கிச்சீருடை பணிக்காலத்தின் மிகச்சிறப்பான அம்சமே மும்பை மாநகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பல்வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அத்தனை நிழல் உலக தாதாக்களின் கொட்டங்களையும் அடக்கி, மும்பை மக்களும், வர்த்தகத்துறையினரும் அச்சமின்றி வாழ வழி செய்தவர் என்பதுதான். சிவானந்தம், மும்பை நிழல் உலக தாதாக்களை ஒடுக்கிய அனுபவத்தை புத்தகமாக எழுதி இருக்கிறார். 'தி பிரம்மாஸ்திரா அன்லீஷ்டு' என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்காக அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவரோடு ஒரு சந்திப்பு:
பொள்ளாச்சியில் புகுமுக வகுப்பும், பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு, 1974-இல் கோயம்புத்தூரில் முதுகலைப் படிப்பினை முடித்தேன். உடனே, கோயம்புத்தூரில் புதிதாக துவக்கப்பட்ட ஒரு கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. 1975-இல் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்து தேர்வு எழுதினேன். ஐ.பி.எஸ். பணிக்கு நான் தேர்வானேன். ஐ.பி.எஸ். பயிற்சியை முடித்துவிட்டு, எனக்கு ஒதுக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிக்குச் சேர்ந்தேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா என்ற ஊரில் முதல் போஸ்டிங். அதுதான் சத்ரபதி சிவாஜியின் தலைநகரம். ஐ.பி.எஸ். பயிற்சியின்போதுதான் ஹிந்தி கற்றுக் கொண்டு, அதற்குரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் சதாராவில் எல்லோரும் மராத்திதான் பேசுவார்கள். நான் சீக்கிரமே அவர்களோடு பேசிப் பழகி சரளமாக மராத்தி மொழி பேசக் கற்றுக் கொண்டுவிட்டேன்.
Diese Geschichte stammt aus der October 19, 2025-Ausgabe von Dinamani Vellore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore
Dinamani Vellore
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Vellore
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Vellore
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Vellore
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Vellore
ஆஸி. யுடனான ஒருநாள் தொடர்: வரலாறு படைத்தது வங்கதேசம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
June 12, 2026
Dinamani Vellore
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Vellore
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Vellore
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Vellore
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Vellore
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Listen
Translate
Change font size

