Versuchen GOLD - Frei
செல்வத்துப் பயனே ஈதல்!
Dinamani Tiruvarur
|December 10, 2025
'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி.
ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை; தனக்கென்று மட்டும் வைத்துக் கொண்ட துமில்லை. அண்மைக்காலமாக அதாவது இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழர் களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரியமாற்றம் சொத்துக்குவித்தல் என்னும் வழக்கம்; இது தமிழர்களின் மரபன்று.தேடித் தேடிப் பொருளைக் குவிப்ப தும் அவ்வாறு குவிந்தவற்றைக் கொண்டு மேலும் மேலும் அதைப் பெருக்குவதற் கான வழிகளில் ஈடுபடுவதும் குறிப்பாக மண்ணிலும் பொன்னிலும் அதை முதலீடு செய்வதும் இதுபோன்ற பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதும்தான் வாழ்க்கை யின் குறிக்கோள் என்று கருதிக் கொண்டி ருக்கிற காலமாக இருக்கிறது.
வாழ்வுக்கான அகப்பொருள் தேடிக் கண்டு தேர்ந்து உலகுக்கே உரக்கச் சொன்ன தமிழர்கள் தாங்களே அந்த மெய்ப் பொருளை மறந்துவிட்டுப்பொய்ப்பொருளை நாடி - புறவாழ்வுக்குப் பொருள் தேடி அலைகி றார்களோ என்ற ஐயமும் தோன்றுகிறது.
இதிலே வேடிக்கை என்னவென்றால், வேண்டுதல் வேண்டாமை இலானாகிய கடவுளையும் இதற்குப் பங்கு சேர்த்துக் கொள்வதுதான். இந்தக் கோயிலில் இத் தனை முறை இப்படி வேண்டிக் கொண் டால்செல்வம்கொட்டோகொட்டென்று கொட்டும் என்று வேண்டுகிறவர்கள் நம்பு கிறார்கள். அவ்வாறு வேண்டிச் செல்வத் தைச் சேர்த்தவர்கள் தாங்கள் சேர்த்த செல் வத்துக்குக் காரணம் அந்தக் கடவுள்தான் என்றும், ஏதும் பழி-பாவம் வந்து விடக் கூடாது என்பதற்காக அதில் ஒரு பங்கை கடவுளுக்கே கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் நம்புகிறார்கள்.
பொருட் செல்வத்துக்காகவே மட்டும் அலையும் இந்த வாழ்க்கையில் அன்பு, கருணை, நிம்மதி, உடல்-மனநலம், நீளா யுள், சமூக மதிப்பு, மானுட நேயம் உள் ளிட்ட பலவற்றை இழப்பதோடு மட்டு மின்றித் தாங்கள் சேர்த்த செல்வத்தைச் செலவழித்து மீண்டும் இவற்றையெல்லாம் பெற்று விடலாம் என்று நம்புவதுதான் அதைவிடவும் வேடிக்கையாக இருக்கிறது.
கனியைக் கனியாகச் சுவைக்காது கனி யென்று எழுதி வைத்த காகிதத்தைச் சுவைப்பது போலத்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வாழ்க்கையும்.
'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' என்று வாழ்க்கையின் எளிமையை அழகா கக் குறிப்பிடுகிற சங்க இலக்கியம் அதனை மேலும் விரிவாக்குகிறது.
Diese Geschichte stammt aus der December 10, 2025-Ausgabe von Dinamani Tiruvarur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநர் யத்தீஸ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
December 11, 2025
Dinamani Tiruvarur
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Tiruvarur
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Tiruvarur
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Tiruvarur
2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா
டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
1 min
December 11, 2025
Dinamani Tiruvarur
ஆட்டத்துக்கு இரு முறை 'டிரிங்க்ஸ்' இடைவேளை
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்தின் முதல் மற்றும் 2-ஆம் பாதியில் 3 நிமிஷங்கள் 'டிரிங்க்ஸ்' இடைவேளை விடப்படும் என ஃபிஃபா அறிவித்தது.
1 min
December 10, 2025
Dinamani Tiruvarur
மகளிர் டி20: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் கமலினி, வைஷ்ணவி
இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இந்திய மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
December 10, 2025
Dinamani Tiruvarur
புதுச்சேரியிலும் தவெக போட்டியிடும்: விஜய்
'புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயம் தொடக்கம்'
1 mins
December 10, 2025
Dinamani Tiruvarur
எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி
மும்பை, டிச. 9: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாம் சதமடிப்பதற்கு உதவுவதற்காக, சக வீரர் குர்சரண் சிங் எலும்பு முறிந்து கையோடு பேட் செய்ய வந்ததாக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
1 min
December 10, 2025
Dinamani Tiruvarur
2-ஆவது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை
வங்கி, எண்ணெய்த் துறை நிறுவன பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் கொள்கை முடிவை எதிர்நோக்கிய எச்சரிக்கை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
