Facebook Pixel குடமுழுக்கும் அறநிலையத் துறையும்! | Dinamani Tiruvarur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!

Dinamani Tiruvarur

|

April 25, 2025

டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா

கார்ல் மார்க்ஸ் ‘மதம் என்பது வெகு ஜனங்களின் லாகரி வஸ்து’ என்று கூறியது கிட்டத்தட்ட உண்மை ஆகிவிட்டதோ? ‘கடவுள் இல்லை, இல்லை, இல்லவேயில்லை’ என்று ஆரம்பித்த திராவிட இயக்கம், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என உருமாறி, இன்று திராவிட மாடல் ஆட்சியில் 4,000 கோயில்களுக்கு மேல் நாங்கள் குடமுழுக்கு செய்து விட்டோம் என பெருமையடிக்குமளவு பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இவை ஒன்றுக்குக் கூட அரசு ஒரு காசு செலவழிக்கவில்லை.

இப்படித்தான், தென்காசி லோகநாயகி சமேத காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 07.04.2025-இல் விமரிசையாக நடைபெற்றது. குடமுழுக்கு என்று அறிவித்துவிட்டாலே எல்லைகளைத் தாண்டி, நாடுகளைத் தாண்டி பக்தர்கள் பல லட்சங்களைக் குவிக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் பக்தர்களின் தர்ம மனப்பான்மையும், பக்தியும் மட்டுமல்ல; கோயிலின் வீர்யமும், சக்தியும் காரணிகளாகும்.

‘கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை’ என்ற கருத்தியல் இன்று ஏற்பட்டதல்ல. ஹிந்து மதம் துவங்கிய காலத்தில் இருந்து, குறிப்பாக ஆதிசங்கரர் வரலாற்றுடன் அந்த கருத்தியல் இன்றுவரை பயணிக்கிறது.

முன்பு ஒருமுறை தென்காசி வந்த அன்றைய அமைச்சர் ராஜாராம், சிவந்தி ஆதித்தன் கட்டிய கோபுரத்தை பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். ‘ராமசாமி நாயக்கரின் சீடனாக இருந்த நீங்களா கோயிலுக்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்கள்’ என ஆச்சரியப்பட்டேன். அவர் சிரித்தபடியே சொன்னார், “கடவுள் இல்லை என்று டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா சொன்ன போது எனக்கு வயது 26; இன்று எனக்கு வயது 62, வா கோயிலுக்குப் போகலாம்” என்றார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மாற்றம் பெறும் கேரளம்!

இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.

time to read

3 mins

March 10, 2026

Dinamani Tiruvarur

குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!

உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

March 10, 2026

Dinamani Tiruvarur

துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் துணிச்சலுடன் விளையாடுவதுதான் இந்திய அணியின் ஒரே திட்டமாக இருந்ததென, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.

time to read

1 min

March 10, 2026

Dinamani Tiruvarur

கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?

கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

time to read

2 mins

March 09, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

time to read

1 min

March 09, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பரமத்தி வேலூரில் 110.4 டிகிரி வெயில்

தமிழகத்தில் அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 110.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

time to read

1 min

March 09, 2026

Dinamani Tiruvarur

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.

time to read

2 mins

March 09, 2026

Dinamani Tiruvarur

உலக மகளிர் தினம்: முதல்வர் வாழ்த்து

உலக மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

March 08, 2026

Dinamani Tiruvarur

மகளிர் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10

இந்தியா தடுமாற்றம் 105/6

time to read

1 min

March 08, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும்!

“நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவு மறைவின்றி தரிசித்து, அதை அழகுணர்ச்சி யுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா.

time to read

2 mins

March 08, 2026

Translate

Share

-
+

Change font size