Versuchen GOLD - Frei

கண்ணியக் காவலர் கக்கன்ஜி!

Dinamani Tiruvallur

|

June 18, 2025

மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். "என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது, "உங்கள் அன்பு மட்டும் போதும்" என்றார் கக்கன்ஜி.

- புலவர் வே.பதுமனார்

வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி. 1909-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாளில் சிதைந்த மண்சுவர், செல்லரித்த கூரை வீட்டில், பூசாரி கக்கனுக்கும் தாய் குப்பிக்கும் பிறந்த குழந்தை; படிப்பு கைவிட்டாலும், உழைப்பால் உயர்ந்து, விடுதலைப் போராட்டக் களத்துத் தளபதியாக, சிறைத் தண்டனையும் கசையடியும் பெற்று, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சராகத் தொண்டாற்றிய அந்தத் தூயவர். கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்து ஐந்து மகன்களும் ஒரு மகளும் அவருக்கு வாரிசாக வாய்த்தனர்.

வாழ்வில் திருப்பம் - காங்கிரஸ் கட்சிப் பணிகளில் விருப்பம்; தம் வாழ்வின் முன்னோடியாக வரித்துக்கொண்ட தியாகி மதுரை வைத்தியநாத ஐயர் முன்னிலையில் கக்கன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். காந்திய வழியில் பொதுத் தொண்டு புரிய விழைந்தார். 1939-ஆம் ஆண்டில் முனைப்பாகச் செயல்பட்டார்.

விடுதலைப் போராட்டம் தீவிரமான போது 'வந்தே மாதரம்' என்று அச்சிட்ட துண்டு அறிக்கைகளை மக்களிடையே வழங்கினார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்தனர். விடுதலை ஆனதும் கக்கன் முன்னிலும் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார். புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்தார். இதைக் கேள்விப்பட்ட அண்ணல் காந்தி, கக்கனைத் தனிநபர் சத்தியாகிரகப் போரின் தலைமைத் தளபதியாக நியமித்தார். இதை அறிந்த அரசு அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை விதித்தது.

கசையடியும், சிறைக் கொடுமையும் அனுபவித்து வெளியே வந்த மறுநாளே, கக்கனுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பைத் தலைமை வழங்கியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தால் நாடெங்கும் கலவரம் மூண்டது. காங்கிரஸ் இயக்கத்தை வெள்ளையர் ஆட்சி தடை செய்தது. ஆனால், தம் நண்பர்கள் பழனிசாமி, ராமசாமி ஆகியோருடன் கக்கன் தலைமறைவானார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்கும் அரசாணை ரத்து

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvallur

இறுதி ஆட்டத்தில் ஷரச்சி பெங்கால் டைகர்ஸ்

ஹாக்கி இந்தியா மகளிர் லீக் தொடரில் எஸ்ஜி பைப் பர்ஸ் அணியை சடன் டெத் மு றையில் வீழ்த்தி இறுதி ஆட்டத் துக்கு தகுதி பெற்றது ஷரச்சி பெங்கால் டைகர்ஸ் அணி.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvallur

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvallur

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvallur

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvallur

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size