Versuchen GOLD - Frei
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!
Dinamani Tirunelveli
|May 15, 2026
சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
பிரவீண்குமார் சக்ஸேனா
இந்த அமைப்பு சிந்துப் படுகை முழுவதிலும் குடிநீர், விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு உதவுவதுடன், எல்லைக்கு இருபுறமும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.
1947-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது சிந்து நதி அமைப்பும் இருநாடுகளுக்கும் இடையே பிரிக்கப்பட்டது. நதிகளின் தொடக்கப் பகுதிகளை இந்தியா கட்டுப்படுத்துகிறது; பாகிஸ்தானின் பஞ்சாபிலுள்ள விவசாய நிலங்கள் அந்த நீரைப் பெரிதும் சார்ந்துள்ளன.
இந்தியாவுக்கு அதன் பஞ்சாப், ராஜஸ்தானின் மேம்பாட்டுக்காக சிந்து நதி நீர் தேவைப்பட்டதால் 1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி பாகிஸ்தானுடனான நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்தது.
ஆரம்பத்திலிருந்தே, இந்தியாவின் நியாயமான, ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கும், பாகிஸ்தானின் மிகைப்படுத்தப்பட்ட, சில சமயங்களில் அபத்தமான கோரிக்கைகளுக்கும் இடையிலான சமச்சீரற்ற தன்மையால் பேச்சுவார்த்தைகள் அதன் போக்கிலேயே வடிவமைக்கப்பட்டன. அந்த சமச்சீரற்ற தன்மையானது முடிவுகளை பாகிஸ்தானுக்கு சாதகமாக நிலைநிறுத்தியது. 1954-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி உலக வங்கியால் முன்வைக்கப்பட்ட முதலாவது குறிப்பிடத்தக்க முன்மொழிவு இதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
சிந்து, செனாப் ஆகிய இரு நதிகளின் மேல்பகுதிகளிலும் இந்தியாவால் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்; அவற்றின் பயன்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டும். மெராலாவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) செனாப் நதி நீர் எதுவும் இந்தியாவின் பயன்பாட்டுக்குக் கிடைக்காது. கட்ச் பகுதியில் அந்த நதிநீர் அமைப்பிலிருந்து எந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டங்களும் அனுமதிக்கப்படாது என்பவையே அந்தப் பரிந்துரைகள்.
இவை கடுமையானவை என்றபோதிலும், இந்தியா அந்தப் பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டது; இதன் மூலம், விரைவான தீர்வுக்கான தனது விருப்பத்தை அது வெளிப்படுத்தியது. மாறாக, பாகிஸ்தான் அதை முறைப்படி ஏற்றுக்கொள்ளும் முடிவை 1958-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதிவரை, சுமார் ஐந்து ஆண்டுகளுக்குத் தாமதப்படுத்தியது.
Diese Geschichte stammt aus der May 15, 2026-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் விமர்சனம்
'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது' என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
மீண்டும் சறுக்கியது சென்னை
மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
காலத்துக்கே ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்
பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
முகமதன் எஸ்சி-யை அபார வெற்றி கண்டது மும்பை சிட்டி எஃப்சி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 4-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
கரப்பான் பூச்சிகளாக அமைப்பைத் தாக்கும் வேலையற்ற இளைஞர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்
வேலையற்ற சில இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவர்கள் அதிகார கட்டமைப்பு மீது தாக்குதல் தொடுப்பதாக விமர்சித்தார்.
1 min
May 16, 2026
Listen
Translate
Change font size
